Alai Osai cover

Movie: Alai Osai (1985)
Music: Ilayaraja
Lyricists: Ilaiya Bharathi
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ

ஆண்: பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்…

ஆண்: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா

குழு: ……..

ஆண்: எத்தனையோ ரத்த வரிகளை எங்கள் முதுகினில் தந்தவரே அத்தனையும் வட்டி முதலுடன் உங்கள் கரங்களில் தந்திடுவோம்

ஆண்: {நந்தன் இனமே பெறும் அரியாசனமே அந்த தினமே வருமே…} (2) எட்டுத்திக்கும் வெற்றி எழுமே மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை

ஆண்: வேர்வை குலம் வீறு கொண்டே போரிடும் போரிடும் வெல்லும் வரை அலைகளும் ஓய்ந்து போகுமோ…

ஆண் மற்றும்
குழு: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ

ஆண் மற்றும்
குழு: பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்…

ஆண் மற்றும்
குழு: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா..

ஆண்: இன்னும் இந்து பள்ளுப் பறையென சொல்லும் மடமைகள் உள்ளதடா நித்தம் இரு சேரி சிறகுகள் வெள்ளி சிறகென ஆகுதடா

குழு: ஆஆ.. ஆஆ…

ஆண்: சின்னப் பொறியே வெறும் அனலாகுமே சிங்க இனமே எழுமே.. சின்னப் பொறியே வெறும் அனலாகுமே சிங்க இனமே எழுமே..

ஆண்: அஞ்சி நின்ற பஞ்சப்படையே கொஞ்சமாவது நெஞ்சம் நிமிர்கையில் எங்கள் மனம் பொங்கி அழுகையில் குங்கும கங்கையும் பொங்கிடுமே மலைகளும் சாய்ந்து போகுமோ….

ஆண் மற்றும்
குழு: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா விழியோ கனலாய் இனி மாறிடுமோ வழியோ புதிதாய் உருவாகிடுமோ

ஆண் மற்றும்
குழு: பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்…

ஆண் மற்றும்
குழு: போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ இனி தூங்காதடா