Oru Punnagai Poove Song Lyrics

Movie: 12B (2001)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Kay Kay and Prashanthini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

குழு: …….

ஆண்: எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது லவ் பண்ணு லவ் பண்ணு ஓஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே நீ என்னை மட்டும் காதல் பண்ணு என் வாலிப நெஞ்சம் உன் காலடி கெஞ்சும் சிறு காதல் பிச்சை போடு கண்ணு

ஆண்: நா கெஞ்சி கேட்கும் நேரம் உன் நெஞ்சின் ஓரம் ஈரம் அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ

ஆண்: எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது லவ் பண்ணு லவ் பண்ணு

குழு: …….

ஆண்: சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்

குழு: உடாதம்மா பீலாதம்மா

பெண்: சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்

குழு: சுத்தாதம்மா ரீலுதாம்மா

ஆண்: உன் படுக்கை அறையிலே ஒரு வசந்தம் வேண்டுமா உன் குளியல் அறையிலே விண்டர் சீசன் வேண்டுமா நீ மாற சொன்னதும் நான்கு சீசனும் மாற வேண்டுமா லவ் பண்ணு

ஆண்: எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது லவ் பண்ணு லவ் பண்ணு

குழு: …….

ஆண்: எண்பது ஆண்டுகள் இளமை வேண்டுமா

குழு: மெய்யாகுமா மெய்யாகுமா

ஆண்: சொடக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா

குழு: மெய்யாகுமா மெய்யாகுமா

பெண்: அட வெள்ளை வெள்ளையாய் ஓர் இரவு வேண்டுமா புது வெளிச்சம் போடவே இரு நிலவு வேண்டுமா

ஆண்: உன்னை காலை மாலையும் சுற்றி வருவது காதல் செய்யவே லவ் பண்ணு
குழு: ஐயோ பண்ணு

ஆண்: எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது லவ் பண்ணு
குழு: லவ் பண்ணு லவ் பண்ணு
குழு: ஐயோ பண்ணு

ஆண்: ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே நீ என்னை மட்டும் காதல் பண்ணு என் வாலிப நெஞ்சம் உன் காலடி கெஞ்சும் சிறு காதல் பிச்சை போடு கண்ணு

பெண்: நீ கெஞ்சி கேட்கும் நேரம் என் நெஞ்சின் ஓரம் ஈரம் அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ

குழு: ………..