99 Songs cover

Movie: 99 Songs (2021)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: A. R. Rahman and Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓர் ஆயிரம் வானவில் பூமியில் உன் கண்களோ தேடுதே காரிருள் பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில் உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில்

ஆண்: உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக

ஆண்: ஓ கூச்சலே மௌனமாய் மாறிடு ஓ வஞ்சமே நன்மையாய் ஏறிடு பேராசையே தானமாய் ஆகிடு ஓ இன்மையே எனில் பெய்திடு

ஆண்: உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக

ஆண்: கிளை வீழ்த்தினும் பூ தரும் நன்மரம் மிதித்தேறினும் தாங்கிடும் ஓடமும் அடித்தலுமே இசைதரும் மேளமும் இவை போலவே ஏங்கிடும் தாய்மனம்

ஆண்: உன் இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக

ஆண்: உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவும் அது ஒளிர ஒளிர ஒளியைப் பருகும் மானுடம் முழுதும்

ஆண்: அம்மா உன் மடி போதும் நீயே என் வரம் ஆகும் எல்லாம் தந்தாய் வேரைப்போல நின்றே உன்னில் பணிவேன் உந்தன் பாதமெங்கே காலம் எல்லாம் எந்தன் ஆவி உனதே அம்மா உன் கருணை எதனைக் கொடுத்து நிறைத்திடுவேன்

ஆண் மற்றும்
குழு: ஓர் ஆயிரம் வானவில் பூமியில் உன் கண்களோ தேடுதே காரிருள் பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில் உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில்

ஆண்: உன் இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக

ஆண்: உன் இதய இதய திரியில் பேரொளி பரவ நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக