Noolumillai Song Lyrics

Movie: Rail Payanangalil (1981)
Music: Vijaya T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே உதிர்ந்த மாயம் என்ன உன் இதய சோகம் என்ன உன் இதய சோகம் என்ன

ஆண்: நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா

ஆண்: நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா

ஆண்: நினைவு வெள்ளம் பெருகி வர நெருப்பெனவே சுடுகிறது {படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு} (2)

ஆண்: மண்ணுலகில் ஜென்மம் என என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தாய் கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து கண்ணீரை பிழிந்தெடுத்தாய் இறைவா கண்ணீரை பிழிந்தெடுத்தாய்

ஆண்: நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா

ஆண்: நிழல் உருவில் இணைந்திருக்க நிஜம் வடிவில் பிரிந்திருக்க {பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை} (2)

ஆண்: காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை பாவை உன்னை நினைத்திடுவேன் பாடையிலே போகையிலும் தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே உறவை தேடி உயிர் பறந்திடுமே

ஆண்: நூலுமில்லை வாளுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ நானும் வாழ்வை ரசிப்பேனா