Amaithikku Peyarthaan Song Lyrics
Movie: Rail Payanangalil (1981)
Music: Vijaya T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: T. M. Soundararajan
Added Date: Feb 11, 2022
ஆண்: அமைதிக்கு பெயர்தான் சாந்தி சாந்தி சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி உன் பிரிவினில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி உன் உறவினில் தானடி சாந்தி சாந்தி சாந்தி
ஆண்: அமைதிக்கு பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி உன் பிரிவினில் ஏதடி சாந்தி உன் உறவினில் தானடி சாந்தி சாந்தி என் சாந்தி
ஆண்: நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி
ஆண்: அமைதிக்கு பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி
ஆண்: எல்லோரும் வாழ்வில் தேடிடும் பாக்கியம் சாந்தி என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி எனை இன்று வாடும் தனிமையில் இல்லயே சாந்தி எனை இன்று வாடும் தனிமையில் இல்லயே சாந்தி
ஆண்: அமைதிக்கு பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி
ஆண்: உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி
ஆண்: அமைதிக்கு பெயர்தான் சாந்தி அந்த அலையினில் ஏதடி சாந்தி உன் பிரிவினில் ஏதடி சாந்தி உன் உறவினில் தானடி சாந்தி சாந்தி என் சாந்தி சாந்தி என் சாந்தி