Bharathi cover

Movie: Bharathi (2000)
Music: Ilayaraja
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ..ஆ..ஆ..ஹா ஆ ஆஅ
ஆ..ஆ..ஆ..ஹா ஆ ஆஅ
ஆ..ஆ..ஆ..

ஆண்: நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

ஆண்: நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்

ஆண்: மிடிமையும் அச்சமும்
மேவி என் நெஞ்சில்
மிடிமையும் அச்சமும்
மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன
கொன்றவை போக்கென்று

ஆண்: நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்

ஆண்: தன் செயல் எண்ணித்
தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து
நிறைவு பெறும் வண்ணம்

ஆண்: நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்

ஆண்: துன்பம் இனியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக

ஆண்: நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

ஆண்: நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன்
கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்