Aruvadai Naal cover

Movie: Aruvadai Naal (1986)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொறுத்துக்கணும் கொஞ்சம் பொறுத்துக்கணும்

ஆண்: நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொறுத்துக்கணும் கொஞ்சம் பொறுத்துக்கணும்

ஆண்: அதுல நல்லத மட்டும் நீங்க எடுத்துக்கணும் அம்மா எடுத்துக்கணும்

ஆண்: சின்னப் பசங்க நாங்க தப்பு ரொம்ப செய்வோம்

இருவர்: சின்னப் பசங்க நாங்க தப்பு ரொம்ப செய்வோம் மன்னிக்கணும் நீங்க

ஆண்: நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொறுத்துக்கணும் கொஞ்சம் பொறுத்துக்கணும் அம்மா

ஆண்: கல்லாக இருந்தாலும் தண்ணியில தூக்கிப் போட்டு ஊற வெச்சு நாரு உரிப்போம் ஆத்து மணல் எடுத்து கயிறு திரிப்போம்

ஆண்: பாடங்களும் ஏறவில்ல பள்ளிக்கூடம் போகவில்ல தத்துவத்த அள்ளி விடுவோம் வாழும் வித்தைகள கத்துக் குடுப்போம்

ஆண்: எத்தனையோ புத்திமதி கேட்டுப்புட்டோம் அத்தனையும் குப்பையில போட்டுப்புட்டோம் அட காணிக்கைய உண்டியலில் நெறச்சுப்புட்டோம் கஷ்டம் வந்தா உண்டியல ஒடச்சுப்புட்டோம்

ஆண்: காசு பேசும் இது கலிகாலம் ஏழ வாழ்வு அட பரிதாபம்

இருவர்: சுத்திச் சுத்தி வாரோம் புத்தி சொல்லித் தாரோம் பாதைகள மாத்தி விடுவோம் ஹுஹ்ஹூ

ஆண்: நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொறுத்துக்கணும் கொஞ்சம் பொறுத்துக்கணும்

ஆண்: அதுல நல்லத மட்டும் நீங்க எடுத்துக்கணும் அம்மா எடுத்துக்கணும் ஹே

பெண்: {ஏண்டா சமூக சேவை சமூக சேவைன்னு சொல்லிக்கிட்டு ஊரெல்லாம் சுத்திக்கிட்டு இருக்கீங்களே அப்படி இன்னாடா பண்றீங்க

ஆண்: ஏ கெழவி வெவரம் புரியாம பேசாதே டேய் என்னடா பேசாம இருக்கீங்க எடுத்து உடுங்கடா

குழு: வாலிபப் பையன வயசுப் பொண்ணையும் காதல் பண்ணச் சொல்வோம் காதல் பண்ணின ஜோடிகளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வெப்போம் கல்யாணம் பண்ணின அன்னைக்கு ராத்திரி சாவியும் செஞ்சு வெப்போம் இவங்க கண்ட படி பெத்து கஷ்டப் படாம கட்டுப்பாடும் பண்ணுவோம் குடும்பக் கட்டுப்பாடும் பண்ணுவோம்

பெண்: என்ன மாரி கெழவிக்கு என்னாடா பண்ணுவீங்க} (வசனம்)

ஆண்: நாங்களெல்லாம் காந்தி இல்ல ஒருத்தன் கூட புத்தன் இல்ல நாடுகள கூறு பிரிச்சோம் வந்த சுதந்திரத்த நார அடிச்சோம்

ஆண்: மொதலாளி தொழிலாளி வெவசாயி நெசவாளி அத்தனையும் நம்ப இனம் தான் அதுல வித்தியாசம் இந்த பணம்தான்

ஆண்: கால் வயிறு கூட இன்னும் நெறையவில்ல சினிமா தியேட்டருல கூட்டம் மட்டும் குறையவில்ல

ஆண்: உற்பத்திய பெருக்கிடச் சொல்லுறாங்கடா அத கேட்டுப்புட்டு புள்ளக் குட்டி பெத்துட்டாங்கடா

ஆண்: நீயா மாறு அட தூங்காதே நேரம் இது தான் இனி ஏங்காதே

இருவர்: பட்டதினி போதும் சொல்லுறதக் கேளு நாட்ட இனி மாத்திப்புடுவோம்

ஆண்: நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொறுத்துக்கணும் கொஞ்சம் பொறுத்துக்கணும்

ஆண்: அதுல நல்லத மட்டும் நீங்க எடுத்துக்கணும் அம்மா எடுத்துக்கணும்

ஆண்: அய்யோ சின்னப் பசங்க நாங்க
ஆண்: தப்பு ரொம்ப செய்வோம்

இருவர்: சின்னப் பசங்க நாங்க தப்பு ரொம்ப செய்வோம் மன்னிக்கணும் நீங்க

ஆண்: சேவை செய்யிறதெல்லாம் நீங்க பொறுத்துக்கணும் கொஞ்சம் பொறுத்துக்கணும் அம்மா

ஆண்: அதுல நல்லத மட்டும் நீங்க எடுத்துக்கணும் அம்மா எடுத்துக்கணும்