Boom Boom Madu cover

Movie: Boom Boom Madu (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் டும் டும் கல்யாணம்

பெண்: பூ முடிச்சு பொட்டு வச்சு மஞ்ச முடி இட்டு வச்சு பொண்ணு புள்ள கையணைச்சு கொண்டாட்டம்தான்…
ஆண்: ஆஹான்

பெண்: பூ முடிச்சு பொட்டு வச்சு மஞ்ச முடி இட்டு வச்சு பொண்ணு புள்ள கையணைச்சு கொண்டாட்டம்தான்…

ஆண்: நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் ஹே…டும் டும் கல்யாணம்

ஆண்: மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு பந்தலிலே என்னோடுதான் நீ பக்கத்திலே ஒக்காரத்தான் மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு பந்தலிலே என்னோடுதான் நீ பக்கத்திலே ஒக்காரத்தான்

பெண்: பச்சக்கிளி இஷ்டப்படி பூமால நீ போடத்தான் புருஷன் பொஞ்சாதி நாமாகத்தான் நீ சொல்லு புள்ள சொல்ல சொல்ல சந்தோசந்தான்

பெண்: நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
ஆண்: கல்யாணம் டும் டும் கல்யாணம்
பெண்: கல்யாணம் ஹும்ஹூம்…டும் டும் கல்யாணம்

பெண்: மெல்ல தொடணும் சொல்லித் தரணும் மத்ததெல்லாம் தெரியாதவ நான் மன்மதன அறியாதவ மெல்ல தொடணும் சொல்லித் தரணும் மத்ததெல்லாம் தெரியாதவ நான் மன்மதன அறியாதவ

ஆண்: பத்து தரம் முத்தம் தரும் உங்கன்னம் புண்ணாவது அதுவும் புரியாட்டி என்னாவது
பெண்: நான் என்ன சொல்ல ஏது சொல்ல அம்மாடியோ

ஆண்: நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
பெண்: கல்யாணம் டும் டும் கல்யாணம்
ஆண்: கல்யாணம் ஹே ஹேய்…டும் டும் கல்யாணம்

ஆண்: மெத்த விரிச்சு கட்டிப் புடிச்சு முதலிரவ கொண்டாடணும் கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும் மெத்த விரிச்சு ஹான் கட்டிப் புடிச்சு முதலிரவ கொண்டாடணும் கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும்

பெண்: பள்ளியறை பாட்டெடுத்து மாமாவே நீ பாடணும் பூம் பூம் மாடாட்டம் நான் ஆடணும்
ஆண்: ஏய் கோழி வந்து கூவும் வரை கும்மாளம்தான்

இருவர்: நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் டும் டும் கல்யாணம்