Anbu Sagodharargal cover

Movie: Anbu Sagodharargal (1973)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: Ghantasala

Added Date: Feb 11, 2022

ஆண்: {முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக} (2)

ஆண்: பள்ளிக் கொண்ட பிள்ளையிடம் பாட்டுதான் படிப்பதன்றி உள்ளதொரு நோய் தீர்க்க ஒரு காசும் இல்லையடா

ஆண்: தாலாட்டி வளர்த்த நெஞ்சம் தாளாமல் புலம்புதடா தம்பியரைத் தந்த தெய்வம் நம்பியதை மறந்ததடா….

ஆண்: முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக

ஆண்: சொர்க்கத்தின் வாசல் உன்னை சொந்தம் கொள்ள தேடுதடா பக்கத்தில் நானிருக்க… பாலகனை தேடுதடா…

ஆண்: தெய்வம் உன்னை அழைப்பதனை தெரிந்ததடா என் மனமே தேவை ஒரு ஜீவனென்றால் நான் போகச் சம்மதமே.. நான் போகச் சம்மதமே..

ஆண்: முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக