Lyricist Vairamuthu

மின்சார பூவே பெண் பூவே பாடல் வரிகள்

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் 
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் 
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்

மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்
சகியே சகியே சகியே என் மீசைக்கும் ஆசைக்கும்
பூசைக்கும் நீ வேண்டும்

மின்சார கண்ணா மின்சார கண்ணா 
என் மன்னா என் ஆணை கேட்டு 
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்

கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா மதனா மதனா…

என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா….

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்

என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்சபாலை நீ
உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைக்கிறதே வணங்கிட வா…

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் 
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கண்ணா ஆஆஆ ஆஆ கண்ணா ஆஆஆ ஆஆ

வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த
சிற்பம் ஒன்று கண்டேன் 

அதன் விழிகளில் வழிவது அமுதல்ல 
விஷம் என்று கண்டேன் 
அதன் நிழலையும் தொடுவது பழியென்று
விலகிவிட்டேன் ஆஆஆ ஆஆஆ…

வான் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது 
வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது

வா என்றால் நாள் வருதில்லை போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள
ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் 
என் ஆசை ஓசை கேளாய் தோம்த தகிட தகிட தா தத்தின்னா
ததிகிடதோம் ததிகிடதோம் ததிகிடதோம் ஆஆஆஹாஆஆஹா

தா தகிட தோம் தா தகிட தோம் தீம் தகிட
தோம் தீம் தகிட தோம் ஆஆஆஹாஆஆஹா
தோம்ததகிட தத்தகிட தத்தகிட
தத்தகிட தகிட தோம் தகிட தோம் தகிட ஆஆஆஹாஆஆஹா

தகதிமி தத்தோம் தகதிமி தத்தோம் தகதிமி
தத்தோம் தகதிமி தகதிமி தகதிமி ஆஆஆஹாஆஆஹா
தோம்கிட தக்கதின தோம் மின்சார கண்ணா மின்சார கண்ணா…

Movie: Padayappa
Lyrics: Vairamuthu
Music: A.R. Rahman

Leave a Reply

Your email address will not be published.