Annamalai cover

Movie: Annamalai (1992)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

குழு: பாபபப்ப பாபபப்ப பப்பபா பாபபப்ப பாபபப்ப பப்பபா பபப பப்பா பபப பப்பபா பபப பப்பா பபப பப்பபா

ஆண்: கொண்டையில்
குழு: தாழம்பூ
ஆண்: நெஞ்சிலே
குழு: வாழைப்பூ
ஆண்: கூடையில் என்ன பூ
குழு: குஷ்பூ என் குஷ்பூ ஆ

ஆண்: கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

ஆண்: உன்னாட்டம் பொம்பள யாரடி இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி அல்லி ராணி என் அருகில் வா நீ முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண்: வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

பெண்: உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே மின்னல் போல நீ வந்து நின்றால் கூட்டம் கை தட்டுமே கோடி பூக்கள் கொட்டுமே

ஆண்: கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

குழு: பபபபபா பபபபபா பபபபபா பபபபபா

ஆண்: பஞ்சுமெத்த கால் முளைச்சி நடந்து வந்தத போல நீ சுத்தி வந்து இழுக்குறியே சும்மா கெடந்த ஆள ஆ ஆஹா ஹே ஹே ஆஹா

பெண்: கன்று கண்டா கயிர் அறுக்கும் காரான் பசுவ போல நீ எதுக்க வந்தா வழுக்குதய்யா இழுத்து கட்டிய சேல

ஆண்: கண்டாங்கி சேலையாக மாறவா உன் கண்ணாடி மேனி தொட்டு மூடவா

பெண்: கல்யாணதாலி கட்டிபுட்டு கட்டில் மேலாடு ஜல்லிகட்டு

ஆண்: ஆனி வந்தா தாலி வந்து கட்டுவேன் சத்தியம் இன்னும் என்ன பத்தியம்

பெண்: வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

பெண்: மின்னல் போல நீ நடக்கும் சுறுசுறுப்ப பாத்து ஜன்னல் திறந்து கொண்டதய்யா சனிக்கிழமை நேத்து ஆ ஆ ஆன் ஆ

ஆண்: தாஜ்மஹால் நடந்து வந்து தழுவிக்கொண்டத பாத்து அடி தண்ணியாக வேர்த்து போச்சு சட்டையெல்லாம் நேத்து

பெண்: உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது

ஆண்: கண்ணுக்குள் பார்தேன் காதல் மச்சம் கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்

பெண்: அந்த யோகம் வந்து சேர்ந்தா கண்களும் தூங்குமா கட்டில் என்ன தாங்குமா

ஆண்: குஷ்பூ குஷ்பூ குஷ்பூ