Lyricist Vairamuthu

கிழக்கு சிவக்கயிலே பாடல் வரிகள்

கிழக்கு சிவக்கயிலே கிழக்கு சிவக்கயிலே
கீரை அறுக்கையிலே நான் கீரை அறுக்கையிலே

அந்த கரும்பு கடிக்கயிலே அந்த கரும்பு கடிக்கயிலே
நான் பழசை நெனைக்கயிலே பல் அருவா பட்டிருச்சே
சபாஷ் கோனாரே

கிழக்கு சிவக்கயிலே கீரை அறுக்கையிலே
அந்த கரும்பு கடிக்கயிலே
நான் பழச நெனைக்கயிலே பல் அருவா பட்டிருச்சே

மீசை வெட்டருவா என் ஆசை சுட்டிருமா
உன் வேஷம் கலைஞ்சிருமா நான் நேசம் நினைக்கயிலே
நெஞ்சுருகி போயிருச்சே நெஞ்சுருகி போயிருச்சே

மனசு ஆரலையே என் கோபம் தீரலையே
நம் வாழ்வும் மாறலையே
உன் முகத்தை பார்க்கையிலே என் துன்பம் பறந்திருச்சே

ராசா மாறிடணும் என் பாசம் புரிஞ்சிக்கணும்
புது பாதை பார்த்துக்கணும் நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் பொறந்திடுமே எதிர் காலம் பொறந்திடுமே

வாழ்க்கை நாடகமா என் பொறப்பு பொய் கணக்கா
தினந் தோரும் வெறும் கனவா ஏன் விதியை எழுதையிலே
அந்த சாமியும் உறங்கியதையே

ஐயா களங்காததே சூரியன் உடையாததே
ஊர் வஞ்சம் நிலைக்காதே நீ உள நாள் மட்டும் தான்
இந்த உசிரும் போகாதே இந்த உசிரும் போகாதே…

Movie: Seevalaperi Pandi
Lyrics: Vairamuthu
Music: Adithyan