Aanandha Raagam cover

Movie: Aanandha Raagam (1982)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. J. Yesudhas

Added Date: Feb 11, 2022

ஆண்: கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் என் கண்மணியைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள் என்னை மறந்ததேன்…ஏன்.. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்

ஆண்: கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்

ஆண்: {உறவே பிரிவாகி வழி மாறும் போது உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது} (2)

ஆண்: நினைவிழந்தேன் எனை மறந்தேன் காதலினாலே மதியிழந்து வழி மறந்து வாடுகின்றேனே என்னை மறந்ததேன்..ஏன்.. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்

ஆண்: கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்

ஆண்: {ஜீவன் மறைந்தாலும் விலகாத நேசம் காலம் பிரித்தாலும் மறையாத சோகம்} (2)

ஆண்: விதி எழுதும் சதி இதுவோ யார் அறிவாரே விழி இருந்தும் பார்வை இல்லை எங்கு செல்வேனே என்னை மறந்ததேன்..ஏன்.. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்

ஆண்: கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் என் கண்மணியைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள் என்னை மறந்ததேன்…ஏன்.. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்