Andhaman Kaidhi cover

Movie: Andhaman Kaidhi (1952)
Music: G. Govindarajulu Naidu
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: C. S. Jayaraman and M. L. Vasanthakumari

Added Date: Feb 11, 2022

ஆண்: காணி நிலம் வேண்டும்.ம்.ம்.ம்.ம். காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்

இருவர்: காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்

ஆண்: தூணில் அழகியதாய். ஆ.ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.அ அ ஆ தூணில் அழகியதாய் நன் மாடங்கள் தூய நிறத்தினதாய் அங்கு தூணில் அழகியதாய் நன் மாடங்கள் தூய நிறத்தினதாய் அந்தக் காணி நிலத்திடையே ஒர் மாளிகை கட்டித் தர வேண்டும் அந்தக் காணி நிலத்திடையே ஒர் மாளிகை கட்டித்தர வேண்டும்

பெண்: அங்கு கேணி அருகினிலே. ஏ..ஏ..ஏ…ஏ..ஏ… கேணி அருகினிலே. தென்னைமர கீற்றும் இளநீரும் கேணி அருகினிலே தென்னைமர கீற்றும் இளநீரும்.

இருவர்: காணி நிலம் வேண்டும்

ஆண்: பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் அந்தப் பக்கத்திலே வேணும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் அந்தப் பக்கத்திலே வேணும் நல்ல முத்துச்சுடர் போலே நிலா ஒளி முன்பு வரவேணும் நல்ல முத்துச்சுடர் போலே நிலா ஒளி முன்பு வரவேணும்..

பெண்: கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் பட வேணும் கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் பட வேணும் எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளம் தென்றல் வரவேணும் எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளம் தென்றல் வரவேணும்

இருவர்: காணி நிலம் வேண்டும் பராசக்தி