ஞாபகம் வருதே பாடல் வரிகள்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…

ஏதோ ஒன்றை தொலைத்தது போலே
ஏதோ மீண்டும் பிறந்தது போலே
தாயே என்னை வளர்த்தது போலே
கண்களின் ஓரம் கண்ணீர் வருதே..

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

முதன் முதல் பிடித்த பட்டாம்பூச்சி
முதன் முதல் திருடிய திருவிழா வாட்சு
முதன் முதல் குடித்த மலபார் பீடி

முதன் முதல் சேர்த்த உண்டியல் காசு
முதன் முதல் பார்த்த டூரிங் சினிமா
முதன் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி

முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
முதன் முதலாக பழகிய நீச்சல்
முதன் முதலாக ஓட்டிய சைக்கிள்
முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்

முதன் முதலாக அப்பா அடித்தது
முதன் முதலாக சாமிக்குப் பயந்தது
முதன் முதலாக வானவில் ரசித்தது

முதன் முதலாக அரும்பிய மீசை
முதல் முதலாக விரும்பிய இதயம்
முதல் முதலாக எழுதிய கடிதம்
முதன் முதலாக வாங்கிய முத்தம்…

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…

Movie: Autograph
Lyrics: Cheran
Music: Bharadwaj