நினைவுகள் நெஞ்சினில் பாடல் வரிகள்

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்னே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை

எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை
சுமந்து போக மறுக்கிறதே

மொழிகள் எல்லாம் முடமாகி என்
மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை..

எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னைப் எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய

பெண்னே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை…

Movie: Autograph
Lyrics: Cheran
Music: Bharadwaj