Bheema cover

Movie: Bheema (2008)
Music: Harris Jayaraj
Lyricists: Yuga Bharathi
Singers: Chinmayi, Sadhana Sargham and Nikhil Mathew

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்

பெண்: எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே

பெண்: எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்

ஆண்: இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை

பெண்: உன்னை காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம் கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம் சிறு பாா்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்

ஆண்: எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்

பெண்: …………….

பெண்: மரம் இருந்தால் அங்கே என்னை நான் நிழலென நிறுத்திடுவேன் இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்

ஆண்: இனி மேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே

பெண்: எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய்

ஆண்: நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே

பெண்: ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்