director vetrimaran images

இயக்கனர் வெற்றிமாறனின் வாழ்க்கை வரலாறு 

Name Vetrimaaran
Born Name Vetrimaaran
Age 46 (September 4, 1975)
Occupation Film Director, Film Producer, Screenwriter
Parents Name Dr. V. Chitravel (Father)

Megala Chitravel (Mother)

Spouse Name Aarthi
Children Poonthendral (Daughter)

தமிழ் சினிமாவில் இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் இயக்குநர்களில் எல்லோராலும் மதிக்கப்படும் விரும்பப்படும் இயக்குநர் யார் என்று கேட்டால் யோசிக்காமல் வெற்றிமாறன் என்று சொல்லிவிடலாம்.

தொடர் வெற்றி படங்களை இயக்கியும் தயாரித்தும் தமிழ் சினிமாவை விருதுகளால் நனைய வைத்து இந்திய அளவில் பலரும் அண்ணாந்து பார்க்கும் வகையில் திரைப்படங்களை எடுத்து வருபவர் அசுர இயக்குனர் வெற்றிமாறன்.

director vetrimaran images

சாதி ஏற்றத்தாழ்வுகள் கல்வி அறிவின், அவசியம் ஆகியவற்றை இத்தனை எளிதாய் சொல்லிவிட்ட இயக்குனர் ஒருவரை தேடிப் பார்க்கவேண்டும் என்ற அளவிற்கு ஜனரஞ்சகமும், நேர்த்தியும் இணைந்த ஒரு இயக்குனர் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது.

இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

Director Vetrimaaran Childhood Days in Tamil

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் செப்டம்பர் 4, 1975 ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தார். அவரது அப்பா சித்ரவேல் கால்நடை மருத்துவ விஞ்ஞானி. அம்மா மேகலா நாவல் ஆசிரியர். வேலூர் – ராணிப்பேட்டையில் வளர்ந்த வெற்றிமாறனுக்கு திரைப்படம் என்றால் கொள்ளை இஷ்டம். மஞ்சள் காமலை வந்த போதும் தியேட்டர் சென்று படம் பார்த்த சினிமா ரசிகர் வெற்றிமாறன்.

director vetrimaran images

Director Vetrimaaran Early Life in Tamil

ராணிப்பேட்டையில் பள்ளி படிப்பை முடித்ததும் சென்னையில் உயர்கல்வி. சென்னை லயோலாவில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஆங்கில முதுகலைப் பட்டம் முடிக்கும் தருவாயில், தனது பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் இவருக்கு வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தது.

director vetrimaran images

பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ச. ராஜநாயகம் கொடுத்திருக்கிறார். . ‘சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு’ என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறார். இவரது இந்தப் பயணத்திற்கு தொடக்கமாக ச.ராஜநாயகம் இருந்துள்ளார்.

அவரே வெற்றிமாறனை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். பாலுமகேந்திராவிடம், கதை நேரம் தொலைக்காட்சித் தொடரில் பணியாற்ற கல்லூரி படிப்பை நிறுத்தினார். இவர் திரைப்படக்கலையைப் பாலுமகேந்திராவிடம் முதன்மையாகக் கற்றார்.

Director Vetrimaaran Marriage Life in Tamil

வெற்றிமாறன் கல்லூரி காலத்தில் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து மணந்தார், இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் (பூந்தென்றல்) மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

Director Vetrimaaran Entry in Cini Field in Tamil

வெற்றிமாறன் இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. புத்தகம் படிப்பது அதற்கான சினாப்ஸிஸ் எழுதுவது தான் ஆரம்ப நாட்களில் வெற்றிமாறனுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். எட்டு வருடங்கள் பாலுமகேந்திராவிடம் சினிமா கற்றுக்கொண்டார் வெற்றிமாறன்.

பின்னர் இயக்குனர் கதிரிடம் இணைந்தவர் காதல் வைரஸ் படத்தில் பணியாற்றினார். பின்னர் மீண்டும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இணைந்தார். இந்த முறை அது ஒரு கனாக்காலம் படத்தில் பணியாற்றதன் மூலம் தனுஷுடன் அறிமுகம் கிடைத்தது வெற்றிமாறனுக்கு.

director vetrimaran images

அதை பயன்படுத்தி கதையை சொல்லி தனுஷை தனது  நாயகனாக ஃபிக்ஸ் செய்தார் வெற்றிமாறன். இருப்பினும் அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டே  இருந்தது. தயாரிப்பாளர்கள் முன் வராததும் அதற்கு ஒரு காரணம்.

பொல்லாதவன் நண்பர் ஒருவர் அவரது பைக்கை தொலைத்து விட அந்த  அனுபவங்களை திரைக்கதையாக வைத்து ஒரு ஸ்க்ரிப்டை தயாரித்திருந்தார் வெற்றிமாறன். அது தான் இப்படத்தின் கதை. வட சென்னை சிறந்த திரைக்கதைக்கு எடுத்துகாட்டு, அந்த படத்தின் திரைக்கதையை ஒரு நாவலாகவே எழுதலாம்.

ஆடுகளம், விசாரணை, அசுரன்  என வெற்றிமாறன் இயக்கிய படங்கள் நாவலை தழுவி திரைக்கதையாக உருவாக்கப்பட்டவை. வசூல் ரீதியாகவும் அந்தப் படங்கள் சாதித்திருந்தன. அதே நேரத்தில் அந்த படைப்புகள் வெற்றிமாறனுக்கு தேசிய விருதுகளையும் பெற்றுக் கொடுத்தன.

director vetrimaran images

Director Vetrimaaran Film List in Tamil

2007 – பொல்லாதவன்

சர்வதேசப் புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்படமான ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ திரைப்படத்தின் பாதிப்பில் உருவானதுதான். ஒரு சராசரி இளைஞனின் பைக் திருடுபோவது, அதன் பின்னணியில் இருக்கும் கஞ்சா கடத்தல் மாஃபியா அவர்களுக்கும் இந்த இளைஞனுக்கும் நிகழும் மோதல் ஆகியவற்றைக் கொண்டு ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் கமர்ஷியல் படமாகவே ‘பொல்லாதவன்’ திரைப்படத்தை உருவாக்கியிருப்பார் வெற்றிமாறன்.

director vetrimaran images

2011 – ஆடுகளம்

மதுரை வட்டாரத்தில் நடக்கும் சேவல் சண்டை பந்தயத்தை மையமாக வைத்து மனிதர்களின் அடி ஆழத்தில் இருக்கும் வன்மத்தையும் பகையையும் சித்தரித்த ‘ஆடுகளம்’ திரைப்படமும் மேற்பரப்பில் ஒரு சுவாரஸ்யமான கமர்ஷியல் படத்துக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தாலும் அடி ஆழத்தில் பேரிலக்கியங்களால் கையாளப்படும் மனித உணர்வுகள், சிறு கோபத்தால் மனிதன் அடையக்கூடிய கீழ்மைகள் அப்பாவி மனிதர்களின் சாதாரணமாக வெளிப்படும் உன்னதங்கள் ஆகியவற்றைப் பேசுவதாக அமைந்திருந்தது.

director vetrimaran images

2016 – விசாரணை

காவல்துறை வன்முறையை சமரசமின்றி தோலுரித்த படம். அதன் முதல் பாதி எம்.சந்திரகுமார் என்னும் ஆட்டோ ஓட்டுநர் தான் தவறுதலாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அனுபவித்த கொடுமைகளை முன்வைத்து எழுதிய ‘லாக்கப்’ நாவலையும் இரண்டாம் பாதி 2012-ல் நிஜத்தில் நடைபெற்ற சில என்கவுன்ட்டர் கொலைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டவை.

director vetrimaran images

2018 – வட சென்னை

வடசென்னையில் நிலவும் ரவுடியிசம், அங்கு ரவுடியிசம் உருவாவதன் பின்னால் இருக்கும் சமூக, அரசியல் காரணிகள், அவற்றால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வில் நிகழும் தாக்கங்கள் என அனைத்தையும் பதிவு செய்திருந்தார். உண்மையில் வட சென்னையிலிருந்த நிழல் உலகத்தின் 30-40 ஆண்டு வரலாற்றை மூன்று பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கத் திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன்.

director vetrimaran images

2019 – அசுரன்

எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மையமாக வைத்து ‘அசுரன்’ திரைப்படத்தை இயக்கினார் வெற்றிமாறன். 1980-களிலும் 1960-களிலுமாக இரண்டு தளங்களில் நடக்கும் இந்தக் கதையில் தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் சாதியக் கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமை அவர்கள் மீதான ஆதிக்க சாதியினரின் வன்மத்தை அதிகரிக்கும் காரணியாக இருப்பதையும் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான தலித் மக்களின் எழுச்சி எனத் தீவிரமான சமூக அரசியல் பிரச்சினைகளை ஒரு கமர்ஷியல் மிகை நாயக சினிமாவின் சட்டகத்துக்குள் கச்சிதமாகப் பொருத்தியிருந்தார் வெற்றிமாறன்.

director vetrimaran images

2020 – பாவக்கதைகள்

ஆந்தாலஜி திரைப்படமன ஓர் இரவு நான்காவது பகுதியாக வெளிவந்தது இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளனர்.

2022 – விடுதலை

க்ரைம் திரில்லர் படமான விடுதலை திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளனர், இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023 – வாடிவாசல்

ஜல்லிக்கட்டுத் திருவிழாவை முன்வைத்து சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலைத் திரைப்படமாக்கப் போகிறார் வெற்றிமாறன். இதில் இன்றைய முதல் நிலை நட்சத்திரங்களில் முக்கியமானவரான சூர்யா நடிக்கவிருக்கிறார்.

List of Films Produced by Vetrimaaran in Tamil Movies

ஆண்டு

திரைப்படம்

2013 உதயம் NH4
2013 நான் ராஜாவாக போகிறேன்
2014 பொறியாளன்
2015 காக்க முட்டை
2016 விசாரணை
2016 கொடி
2017 லென்ஸ்
2018 அண்ணனுக்கு ஜெய்
2018 வட சென்னை
2018 மிக மிக அவசரம்
2021 சங்கத்தலைவன்
2022 விடுதலை
2022 அதிகாரம்

director vetrimaran images

Director Vetrimaaran Awards and Recognition

  • சிறந்த இயக்குனருக்கான விஜய் டெலிவிஸின் விருது பொல்லாதவன் படத்திற்காக.
  • சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது ஆடுகளம் படத்திற்காக.
  • சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது ஆடுகளம் படத்திற்காக.
  • சிறந்த இயக்குனருக்கான ஆனந்த விகடன் விருது விசாரணை படத்திற்காக.
  • சிறந்த திரைக்கதைக்கான ஆனந்த விகடன் விருது விசாரணை படத்திற்காக.
  • சிறந்த திரைக்கதைக்கான ஆனந்த விகடன் விருது வட சென்னைபடத்திற்காக.
  • சிறந்த திரைக்கதைக்கான ஆனந்த விகடன் விருது அசுரன்படத்திற்காக.

Director Vetrimaaran Social Media Link

Reference: Wikipedia