actor madhavan images

நடிகர் மாதவனின் வாழ்க்கை வரலாறு

Name R Madhavan
Born Name Ranganathan Madhavan
Other Name Maddy, chocolate boy
Age 51 (June 1, 1970)
Occupation Actor, Writer, Film Producer, Film Director
Parents Name Ranganathan (Father)

Saroja (Mother)

Spouse Name Sarita Birje
Children Vedaant Madhavan (Son)

ஆர். மாதவன், இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

actor madhavan images

பல விஷயங்களில் திறமை வாய்ந்த நடிகராக மாதவன் உள்ளார். அவரது கவர்ச்சிகரமான புன்னகை காரணமாக அவர் அதிகமாக அறியப்படுகிறார். பாலிவுட்டில் அவர் நடித்த “ரெஹ்னா ஹை தேரே தில் மெய்ன்” திரைப்படத்தில் மேடி என்ற கதாபாத்திரம் அவரது நடிப்பை வெளிக்காட்டும் முக்கியமான படமாகும். அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் மேடி என்றே அழைக்கப்பட்டார்.

actor madhavan images

Actor Madhavan Childhood Days in Tamil

தொழில்துறையில் சாக்லேட் பாய் என அழைக்கப்படும் நடிகர் மாதவன் ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் ஜூன் 1, 1970 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் ஒரு தமிழ் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது முழு பெயர் மாதவன் பாலாஜி ரங்கநாதன். அவரது தந்தையான ரங்கநாதன் டாடா ஸ்டீலில் மேலாண்மை நிர்வாகியாகவும் அவரது தாய் சரோஜா பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மேலாளராகவும் பணிபுரிந்து வந்தனர். மாதவனுக்கு தேவிகா என்ற தங்கை இருக்கிறார். அவர் ஒரு மென்பொருள் பொறியாளராக இருக்கிறார். அவர் தற்சமயம் இங்கிலாந்தில் இருக்கிறார்.

actor madhavan images

Actor Madhavan Early Life in Tamil

ஆர். மாதவன் பல்துறை நிபுணராக வலம்வந்தார். இராணுவ பயிற்சி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நடிப்பிலும் சிறந்து விளங்கினார். அவர் மகாராஷ்ட்டிராவில் என்.சி.சி யில் விருது பெற்றார். அவருக்கு இங்கிலாந்து செல்ல வாய்ப்பு கிடைத்தது. மாதவன் பிரிட்டிஷ் ராயல் ஆர்மி, ராயல் கடற்படை மற்றும் விமானப்படையில் பயிற்சி பெற்றார் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். அவர் இராணுவத்தில் சேர நினைத்தார். ஆனால் அவரது வயது காரணமாக நிராகரிக்கப்பட்டார்.

actor madhavan images

Actor Madhavan Marriage Life in Tamil

அவரது மனைவியான சரிதா பிர்ஜையை 1991 ஆம் ஆண்டு முதல்முறை விமான பணிப்பெண்ணாக சந்தித்தார். பிறகு டேட்டிங்கில் இருந்த இந்த ஜோடி 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஆண் குழந்தை (வேதாந்த் மாதவன்) பிறந்தது.

அவர் தனது மகன் வேதாந்திற்கு சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். வேதாந்த் ஆசிய வயது வந்தோருக்கான நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளி வென்று தனது தந்தைக்கு பெருமை சேர்த்தார் வேதாந்த்.

actor madhavan images

Actor Madhavan Entry in Cini Field in Tamil

மாதவன் தனது நடிப்பு வாழ்க்கையை தொலைக்காட்சி மூலம் துவங்கினார். 1994 ஆம் ஆண்டு ‘பனேகி ஆப்னி பாத் எனும் ஜீ’ டிவியின் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் அவர் விளம்பரங்களில் சிறிய வேடத்தில் நடித்து வந்தார். பின்னர் ‘சீ ஹாக்’ என்னும் தொடரில் கப்பலின் கேப்டனாக நடித்ததன் மூலம் அவர் பிரபலமடைந்தார்.

actor madhavan images

அதைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு ‘இண்பெர்னோ’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய ‘மின்னலே’ என்ற திரைப்படத்திலும் மற்றும் ‘டும் டும் டும்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

actor madhavan images

இவரின் திரைப்பட வாழ்க்க்கைக்கு இந்தத் திரைப்படங்கள் மிகப்பெரிய மைல்கற்களாக அமைந்தன. அதைத் தொடர்ந்து ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002), ‘ரன்’ (2002), ‘அன்பே சிவம்’ (2003), ‘ஆய்த எழுத்து’ (2004), ‘இறுதிச்சுற்று’ (2016), ‘விக்ரம் வேதா’ (2017) போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் ரங் தெ பசந்தி (2006), குரு (2007), ‘3 இடியட்சு’ (2009) போன்ற இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .

Actor Madhavan Social Activities in Tamil

நடிப்பை தவிர மாதவனுக்கு கோல்ஃப் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. 2007 ஆம் ஆண்டு அவர் பிரபல தொண்டு நிறுவனத்திற்காக அமிதாப் பச்சன் மற்றும் மணி ரத்னம் ஆகியரோடு கோல்ஃப் விளையாடினார். 2017 ஆம் ஆண்டு நடந்த மெர்சிடிஸ் டிராபி கோல்ஃப் போட்டியில் இவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

actor madhavan images

Actor Madhavan Film List in Tamil

வருடம் திரைப்படம் பாத்திரத்தின் பெயர்
1996 இஸ் ராத் கி சுபாக் நகின் கிளப் பாடகர்
1997 இண்பெர்னோ ரவி
1999 சாந்தி சாந்தி சாந்தி சித்தார்த்
2000 அலைபாயுதே கார்த்திக்
2000 என்னவளே ஜேம்சு வசந்த்
2001 மின்னலே ராஜேஷ் சிவகுமார்
2001 டும் டும் டும் ஆதித்யா
2001 பார்த்தாலே பரவசம் மாதவா
2001 ரகுனா கை தில் மெய்ன் மாதவ் சாஸ்திரி
2002 கன்னத்தில் முத்தமிட்டால் திருசெல்வன்
2002 ரன் சிவா
2002 தில் வில் பியார் வியார் கிரிஷ்
2003 அன்பே சிவம் அன்பரசு
2003 நள தமயந்தி ராம்ஜி
2003 லேசா லேசா தேவ நாராயணன்
2003 பிரியமான தோழி அசேக்
2003 ஜே ஜே ஜெகன்
2004 எதிரி சுப்பிரமணி
2004 ஆய்த எழுத்து இன்பா சேகர்
2004 நத்திங் பட் லைப் தாமஸ் ராபர்ட்சு
2004 மேட் இன் யூ எஸ் அ
2005 பிரியசகி சந்தான கிருஷ்ணன்
2005 ராம்ஜி லண்டன்வாலே ராம்ஜி திவாரி
2006 ரங் தெ பசந்தி அஜய் ரதோட்
2006 தம்பி வேலு தொண்டைமான்
2006 ரெண்டு சக்தி, கண்ணன்
2007 குரு சியாம் சக்சேனா
2007 தட் போர்-லட்டர் வேர்டு அவராக
2007 தில்லி ஹைட்ஸ் அவராக
2007 ஆர்யா ஆர்யா
2007 எவனோ ஒருவன் சிறீதர் வாசுதேவன்
2008 வாழ்த்துகள் கதிரவன்
2008 மும்பை மேரி ஜான் நிகில் அகர்வால்
2008 திப்பு கன்யன் திப்பு கிரி அவராக
2009 யாவரும் நலம் மனோகர்
2009 13பி மனோகர்
2009 குரு என் ஆளு குரு
2009 சிக்கந்தர் ராஜேஸ் ராவ்
2009 3 இடியட்சு ஃபர்ஹான் குரேஷி
2010 ஓம் சாந்தி மேடி
2010 டீன் பாட்டி சந்தானு
2010 ஜூடா ஹி ஜாகி கபீர்
2010 மன்மதன் அம்பு மதனகோபால்
2011 தனு வெட்ஸ் மனு மனோஜ் குமார் சர்மா (மனு)
2012 வேட்டை திருமூர்த்தி
2012 ஜோடி பிரேக்கர்ஸ் சித் கண்ணா
2013 சன்கிளாஸ் சஞ்சய்
2014 அகேலி அவினாஷ்
2015 தனு வெட்ஸ் மனு : ரிட்டர்ன்ஸ் மனோஜ் குமார் சர்மா (மனு)
2015 நைட் ஆஃப் தி லிவிங் டெட்: டார்க்கெஸ்ட் டான் டாம்
2016 இறுதிச்சுற்று பிரபு செல்வராஜ்
2016 சாலா கதூஸ் ஆதி தோமர்
2017 விக்ரம் வேதா விக்ரம்
2017 மகளிர் மட்டும் சுரேந்தர்
2018 சபியாசாச்சி அருண்
2018 ஜீரோ கார்த்திக் சீனிவாசன்
2020 ராகெட்ரி: நம்பி எஃபெக்ட் நம்பி நாராயணன்
2020 ராகெட்ரி: நம்பி விளைவு
2020 நிசப்தம் அந்தோணி
2020 நிஷாபதம்
2020 மாறா மாறா

actor madhavan images

Actor Madhavan Awards and Recognition

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது இறுதிச்சுற்று படத்திற்காக வழங்கப்பட்டது. மேலும் ரன், அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தமிழக அரசு திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன.

actor madhavan images

Actor Madhavan Social Media Link

Reference: Wikipedia