film director mani ratnam images

இயக்குனர் மணிரத்னத்தின் வாழ்க்கை வரலாறு 

Name Mani Ratnam
Born Name Gopala Ratnam Subramaniam
Age 65 (2 June 1956)
Occupation Film Director, Film Producer, Screenwriter
Parents Name Gopala Ratnam (Father)
Spouse Name Suhasini Maniratnams
Children Nandan Maniratnam (Son)

film director mani ratnam images

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே மலர்ந்தது காதல்…. காதல்… வார்த்தைகள் கூற முடியாத ஒன்று… எழுத்துக்கள் கொண்டு எழுத முடியாத ஒன்று…அன்னியிரடம் புரிய வைக்க முடியாத ஒன்று…. உரியவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய ஒன்று….. அத்தகைய காதலை.‌‌… அனைவரும் உணரும் வகையில் திரைப்படமாக எடுக்கும் திறன் கொண்டவர் இயக்குநர் மணிரத்னம்.

அதில் அன்றும் இன்றும் என்றும் அழியா வெற்றி பெற்ற சில படங்கள் அலைபாயுதே, ரோஜா, பம்பாய், ஓ காதல் கண்மணி போன்ற படைப்புகளால் உலகப்புகழ் பெற்றார். இவர் காதல் படங்களை எடுப்பதில்லை மாறாக காதல் காவியங்களை படைக்குறார்.

film director mani ratnam images

மணிரத்னம் இந்திய திரையுலகின் பிரபல இயக்குனர் ஆவார். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எழுத்தாளர் என பல்வேறு திரைத்துறையில் பங்களித்து பிரபலமாகியுள்ளார். இவரின் திரையுலக சாதனையை கண்டு இந்திய அரசு இவருக்கு 2002-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

film director mani ratnam images

இவர் திரைக்கதையில் காதல், ரௌடிசம் என தனது படைப்புகளில் வேற்றுமை காற்றியுள்ளார். மேலும் இவரது திரைக்கதை சுருக்கமான வசனங்களில், எதார்த்தமான நடிப்பு, நடுத்தர மக்களின் பின்னணி, மற்றும் எளிய தொழிலநுட்பத்தில் உருவாகும் திரைப்படமாகும்.

Film Director Mani Ratnam Childhood Days in Tamil

கோபால ரத்தினம் சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர் மணிரத்னம் என்று திரையுலகில் அறியப்படுகிறார். இவர் 1956-ம் ஆண்டு ஜூன் 2ல் பிறந்துள்ளார். இவரது தந்தை கோபால ரத்தினம் “வீனஸ் பிக்சர்ஸில்” என்ற திரையுலக திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் விநியோகஸ்தராக பணியாற்றியவர்.

film director mani ratnam images

இவர் மாமா, ‘வீனஸ்’ கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன், ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும்  தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன்; இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணி ரத்னம் சென்னையிலே வளர்ந்தார்.

திரைக்குடும்பமாக இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது.  திரைப்படம் பார்ப்பது,  அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. ‘அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்’ என, அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும், வளர்ந்த  சிறுவனாக, திரைப்படம் பார்க்கத் துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குப் பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்களைப் பார்த்து, அவரது ரசிகரானார்.

film director mani ratnam images

Film Director Mani Ratnam Early Life in Tamil

இவர் தனது பள்ளிப் படிப்பினை சென்னையில் கற்ற பின்னர், தனது இளங்கலைப் பட்டத்தினை சென்னையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் பிரிவில் படித்தார். பின்னர் மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலாண்மை கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்துள்ளார். இவர் முதுகலைப் பட்டம் முடித்து 1977-ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார்.

Film Director Mani Ratnam Marriage Life in Tamil

திரைப்பட நடிகை சுஹாசினியை 1988ல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார்.

film director mani ratnam images

Film Director Mani Ratnam Entry in Cini Field in Tamil

இவரது மாமா, அண்ணன், தம்பி என அனைவரும் திரையுலகில் தயாரிப்பாளர், விநியோகஸ்தரர் என பணியாற்றியுள்ளனர். திரையுலக குடும்பத்தில் பிறந்துள்ள இவர், அறிமுக காலகட்டத்தில் உதவி இயக்குனராக திரையுலகில் பணியாற்றாமலே இயக்குனராக அறிமுகமானவர்.

film director mani ratnam images

இவர் 1983-ம் ஆண்டு வெளியான பல்லவி அனுபல்லவி திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் தமிழில் மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, பாம்பே, திருடா திருடா என பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.

இவரது படமான ரோஜா திரைப்படத்திற்காக இவருக்கு பிலிம்பேர் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இவர் இசைப்புயல் என புகழப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்-ஐ திரையுலகிற்குள் தனது ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் ஆவார். இவரின் முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா முதல் இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் வெளியாகியுள்ளன.

film director mani ratnam images

இவர் பல திறமை வாய்ந்த கலைஞர்கள்களை திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இவரின் படைப்புகள் வித்தியாசமானதாகயும் அனைவராலும் பெரிதும் பேசப்படும். இவரின் படைப்புகள் பல உண்மை கதைகளை தழுவி அதை மிக அற்புதமாக திரைக்கதை அமைத்து இயற்றுவதில் வல்லவர்.

தமிழ் திரையுலகில் 1980களின் பிற்பகுதியில் பெரும் இயக்குனர்களான கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் மணிரத்னம் அவர்களும் தனது தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர்ப்புற வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய திரைப்படம் இயக்கும் பாணியாகும்.

இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.

film director mani ratnam images

மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றி பெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.

மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.

Film Director Mani Ratnam Film List in Tamil

1983 – பல்லவி அனுபல்லவி (கன்னடம்)

1984 – உணரு (மலையாளம்)

1985 – இதய கோவில்

1985 – பகல் நிலவு

1986 – மௌன ராகம் – இன்றுவரை மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு காதல் படம், நவரச நாயகன் காத்திக், மோகன் ரேவதி நடிப்பில் வெளியான இப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி கண்டது.

1987 – நாயகன் – இன்றும் இந்தியா திரையுலகில் ரௌடிசம் திரைபடமென்றால் பேசப்படும் ஒரு திரைப்படம். இது போன்ற ஒரு திரைப்படத்தை இனி மணிரத்னத்தால் கூட எடுக்க இயலாது என்றுதான் சொல்லவேண்டும்.

1988 – அக்னி நட்சத்திரம்

1989 – கீதாஞ்சலி (தெலுங்கு)- தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.

1990 – அஞ்சலி

1991 – தளபதி (மகாபாரதத்தின் கர்ணன், துரியோதனன் கதாபாத்திரங்களின் தழுவலாகக் கருதப்பட்டது).

1992 – ரோஜா (இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது).

1993 – திருடா திருடா

1995 – பம்பாய் – இப்படம் மனிதன் மதம், இனம், மொழி இவற்றால் வேறுப்பட்டாலும் இறுதியில் மனிதமே சிறந்தது என்றும் மனிதநேயம் முலம்  இணைக்கிறோம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு

1997 – இருவர் – இப்படம் மறைந்த நடிகர் மற்றும் முதல்வர் எம். ஜி ராமசந்திரன் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் மு. கருணாநிதி ஆகிய இருவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

1998 – தில் சே (இந்தி)தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.

2000 – அலைபாயுதே – தமிழ் திரைப்பட வரலாற்றில் காதல் படங்கள் என்று சொன்னால் நினைவிற்கு வரும் படங்களில் ஒன்று. காதல் தொடக்கத்தில் இருப்பது போல் இராது. காதல் மரம் போன்றது அதை சண்டை எனும் இயற்கை சிற்றம் பாதிப்பு ஏற்படுத்தினாலும் அதன் வேர் இருவர் மனதிலும் ஆழமாக இருந்தால் அவ்வித பாதிப்பும் இல்லை என்பதை அழகாக கூறியுள்ளார்.

film director mani ratnam images

2002 – கன்னத்தில் முத்தமிட்டால்

2004 – ஆய்த எழுத்து – யுவாவும் ஆய்த எழுத்தும், வெவ்வேறு நடிகர்களை வைத்து, ஒரே நேரத்தில், தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.

2007 – குரு (இந்தி) – இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.

2010 – ராவணன் திரைக்கதை, இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது.

2013- கடல்

2015 – ஓ காதல் கண்மணி – இப்படம் நாம் காலம் மாறலாம், நடைமுறை மாறலாம். ஆனால் காதல் திருமணத்தில் முடிவதே நம் பராம்பரியம் என்பதை நிலைநிறுத்தி உள்ளது.

film director mani ratnam images

2017 – காற்று வெளியிடை

2018 – செக்கச்சிவந்த வானம்

Film Director Mani Ratnam Awards and Recognition

ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

Film Director Mani Ratnam Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia