actor dhanush images

நடிகர் தனுஷின் வாழ்க்கை வரலாறு

Name Dhanush
Born Name Venkatesh Prabhu Kasthuri Raja
Age 38 (28 July 1983)
Occupation Actor, Director, Producer, Playback Singer, Lyricist, Screenwriter
Parents Name Kasthuri Raja (Father)

Vijayalakshmi (Mother)

Spouse Name Aishwarya R. Dhanush
Children Yatra (Son)

Linga (Son)

ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர் தனுஷ். பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடையவர் நடிகர் தனுஷ்.

actor dhanush images

அவர், தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2-ல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், ஒரு பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்து, இன்று ஹிந்தித் திரையுலகிலும் ‘ரஞ்சனா’ திரைப்படம் மூலமாகத் தனது வெற்றிக்கொடியை நட்டுள்ளார்.

தனது இளம் வயதில் திரையுலகில் நுழைந்த இவர், ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும், ‘3’, ‘எதிர் நீச்சல்’, போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படம் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

Actor Dhanush Childhood Days in Tamil

நடிகர் தனுஷ், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னையில், இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக ஜூலை மாதம் 28 ஆம் தேதி, 1983 ஆம் ஆண்டில் பிறந்தார்.

actor dhanush images

Actor Dhanush Early Life in Tamil

நடிகர் தனுஷ் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள ஆழ்வார்த் திருநகரில் இருக்கும் செயின்ட் ஜான்’ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். தனுஷ் 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்த உடனே அவரை, அவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் அவர்கள், திரையுலகில் நுழையுமாறு வற்புறுத்தியதால், அவர் தனது படிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பினார்.

actor dhanush images

Actor Dhanush Marriage Life in Tamil

நடிகர் தனுஷ் அவர்கள், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, 2004-ம் ஆண்டில் மணமுடித்தார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரியப்போவதாக அறிவித்தனர், பின்னர் விவாகரத்துக்குச் செல்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் மனம் உடைந்துள்ளது.

actor dhanush images

Actor Dhanush Entry in Cini Field in Tamil

தனது அண்ணனின் விருப்பத்தை ஏற்ற அவர், 2௦௦2 ஆம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படம் மூலமாக இருவரும் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தனர். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.

actor dhanush images

இதன் பிறகு வெளியான திருடா திருடி (2003) மற்றும் தேவதையைக் கண்டேன் (2005) போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். அதை தொடர்ந்து சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), திருவிளையாடல் ஆரம்பம் (2006), பொல்லாதவன் (2007) போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

2011-ம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது பெற்றார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் மயக்கம் என்ன என்ற திரைப்படமும் 2012 ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

actor dhanush images

3 என்ற திரைப்படத்தில் இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி (Why This Kolaveri Di)என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிக பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.

இவரது 25 வது திரைப்படமாக வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை வேல்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

actor dhanush images

2015 ஆம் ஆண்டு இவர் நடித்த மாரி, தங்க மகன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 2016 ஆம் ஆண்டு கொடி என்ற பரபரப்பூட்டும் அரசியல் திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 (2017), வட சென்னை (2018), மாரி 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் என்ற திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலித்ததற்காக 100 கோடி கிளப்பில் நுழைந்தது. இப்படத்திற்காக சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, வழங்கப்பட்டது.

actor dhanush images

Actor Dhanush Playback Singer in Tamil

இவர் முதல் முதலில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதை தொடர்ந்து புதுப்பேட்டை என்ற திரைப்படத்திலும் பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டது.

actor dhanush images

Actor Dhanush Film List in Tamil

ஆண்டு திரைப்படம்
2002 துள்ளுவதோ இளமை
2003 காதல் கொண்டேன்
2003 திருடா திருடி
2004 புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
2004 சுள்ளான்
2005 தேவதையைக் கண்டேன்
2005 அது ஒரு கனாக்காலம்
2006 புதுப்பேட்டை
2006 திருவிளையாடல் ஆரம்பம்
2007 பரட்டை என்கிற அழகுசுந்தரம்
2007 பொல்லாதவன்
2008 யாரடி நீ மோகினி
2009 படிக்காதவன்
2010 குட்டி
2010 உத்தம புத்திரன்
2011 ஆடுகளம்
2011 சீடன்
2011 மாப்பிள்ளை
2011 வேங்கை
2011 மயக்கம் என்ன
2012 3
2013 எதிர்நீச்சல்
2013 ராஞ்சனா
2013 மரியான்
2013 நய்யாண்டி
2014 வேலையில்லா பட்டதாரி
2015 அனேகன்
2015 வை ராஜா வை
2015 மாரி
2015 தங்க மகன்
2016 தொடரி
2016 கொடி
2017 ப. பாண்டி
2017 வேலையில்லா பட்டதாரி 2
2018 வட சென்னை
2018 மாரி 2
2019 அசுரன்
2019 எனை நோக்கி பாயும் தோட்டா
2020 பட்டாஸ்
2020 ஜகமே தந்திரம்
2020 கர்ணன்
2021 அட்ரங்கி ரீ
2021 தி க்ரே மேன்
2022 மாறன்

actor dhanush images

List of Songs Sung by Dhanush in Tamil Movies

ஆண்டு தலைப்பு திரைப்படம்
2004 நாட்டு சரக்கு புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
2005 துண்டை காணோம் தேவதையைக் கண்டேன்
2006 எங்க ஏரியா புதுப்பேட்டை
2010 உன் மேல ஆயிரத்தில் ஒருவன்
2011 ஓட ஓட, காதல் என் காதல் மயக்கம் என்ன
2011 வொய் திஸ் கொலவெறி டி, கண்ணழகா 3
2013 டெட்டி பீர் நய்யாண்டி
2014 அம்மா அம்மா, போ இன்று நீயாக, வாட் எ கருவாட் வேலையில்லா பட்டதாரி
2015 டங்காமாரி அனேகன்
2015 நிஜமெல்லாம் மறந்து போச்சு எதிர்நீச்சல்
2015 பழங்கால இரண்டாம் உலகம்
2015 ஓ ஓ, ஜோடி நிலவு, என்ன சொல்ல ஏது சொல்ல தங்க மகன்
2015 மாரி தரா லோக்கல், டோனு டோனு டோனு, பகுலு ஒடயும் டகுலு மாரி மாரி
2016 மாலை வரும் வண்ணில்லா நெஞ்சம் மறப்பதில்லை
2016 கொடி கொடி
2017 சொல்லி தொலையேன் மா யாக்கை
2017 சூரகாத்து, வென்பனி மலரே ப. பாண்டி
2018 கோயிந்தம்மாவல வட சென்னை
2018 மாரி கெத்து, ரவுடி பேபி மாரி 2
2019 நெஞ்சோடு விநாய பிரதர்’ஸ் டே
2019 பொல்லாத பூமி, கண்ணழகு ரத்தினமே அசுரன்
2020 சில் ப்ரோ பட்டாஸ்
2020 காத்தோடு காத்தானேன் ஜெயில்

actor dhanush images

List of Film Produced by Dhanush in Tamil Movies

வருடம் திரைப்படம்
2012 3
2013 எதிர்நீச்சல்
2014 வேலையில்லா பட்டதாரி
2015 ஷமிதாப்
2015 காக்கி சட்டை
2015 காக்கா முட்டை
2015 மாரி
2015 நானும் ரவுடி தான்
2015 தங்க மகன்
2016 ஷமிதாப்
2016 காக்கி சட்டை
2016 விசாரனை
2016 அம்மா கணக்கு
2017 சினிமா வீரன்
2017 ப. பாண்டி
2017 வேலையில்லா பட்டதாரி 2
2017 காலா
2018 வட சென்னை

Actor Dhanush Awards and Recognition

  • 2008 ஆம் ஆண்டில் ‘யாரடி நீ மோகினி’ படத்திற்காக ‘ஆண்டின் சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது’ வழங்கப்பட்டது.
  • 2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது’ வென்றார்.
  • 2011 ஆம் ஆண்டில் ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ மற்றும் ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ பெற்றார்.
  • 2011 ஆம் ஆண்டில் ‘மயக்கம் என்ன’ படத்தின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை’, ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்ற பாடலுக்காகப் பெற்றார்.
  • 2012 ஆம் ஆண்டில் ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருது’ வென்றார்.
  • 2012 ஆம் ஆண்டில் அவர் எழுதிப் பாடிய பாடலான ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் ‘சி.என்.என் 2011ன் டாப் பாடலாகத்’ தேர்வு செய்யப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘அசுரன்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, வழங்கப்பட்டது.

Actor Dhanush Social Media Link

Reference: Wikipedia