actor vikram family

நடிகர் சீயான் விக்ரமின் வாழ்க்கை வரலாறு 

Name Vikram
Born Name Kennedy John Victor
Other Name Chiyaan Vikram
Age 55, (17 April, 1966)
Occupation Actor, Playback Singer, Dubbing Artists, Producer
Parents Name Vinod Raj (Father)

Rajeshwari Raj (Mother)

Spouse Name Shailaja Balakrishnan
Children Dhruv Vikram (Son)

Akshita (Daughter)

‘சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் தனக்கென ஒரு முத்திரைப்பதித்தவர் சீயான் விக்ரம். எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது நடிப்பின்  திறமையால் வளர்ந்து ஒரு முன்னணி நடிகராக விளங்குகிறார். இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

actor vikram

Actor Vikram Childhood Days in Tamil

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில், கிறஸ்துவ தந்தையான வினோத் ராஜுக்கும், இந்து தாயான ராஜேஸ்வரிக்கும் மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1966 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விக்ரம் கென்னெடி வினோத் ராஜ் என்பதாகும். இவருடைய அம்மா, ஒரு சப்-கலெக்டர் மற்றும் புகழ்பெற்ற நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்களின் சகோதரியும் கூட. அவரது மகனான நடிகர் பிரசாந்த், விக்ரமின் நெருங்கிய உறவினராவார். இவருக்கு அனிதா என்ற சகோதரியும், அரவிந்த் என்ற சகோதரனும் உள்ளனர்.

Actor Vikram Early Life in Tamil

விக்ரம் சேலம் அருகேயுள்ள மலைப்பிரதேசமான ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளியில் பயிலும் போதே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லூரியில் படித்து முடித்தார்.

actor vikram

இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 23 அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், மூன்றாண்டுகள் படுக்கையிலே இருந்தார்.

Actor Vikram Marriage Life in Tamil

நடிகர் விக்ரம் அவர்கள், 1992 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சைலஜா பாலக்ருஷ்ணன் என்பவரை குருவாயூரில் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும், அக்ஷிதா என்ற மகளும், துருவ் என்ற மகனும் உள்ளனர். இவரின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது திரைப்படங்க்ளில் நடித்து வருகின்றார்.

actor vikram family

Actor Vikram Entry in Cini Field in Tamil

விக்ரம் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1988 ஆம் ஆண்டு  கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். லயோலா கல்லூரியில் தனது முதுகலைப் பட்டத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே, சில விளம்பரங்களில் நடித்து வந்த அவரை, இயக்குனர் சி. வி. ஸ்ரீதர் அவர்கள், அவரது அடுத்தப் படமான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அப்படம் 1990 ஆம் ஆண்டில் வெளியானது.

actor vikram, ajith, maheshwari

நடிகர் விக்ரம் அதன் பின் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. அவர் பின்னணிப் பாடகர் மற்றும் பின்னணிக் குரல் நடிகராகவும் பணியாற்றினார். இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது.

actor vikram in sethu movie

இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்களில் நடித்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார்.

அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார்.

actor vikram in anniyan

பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.

actor vikram in raavanan

Actor Vikram Social Activities in Tamil

விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

actor vikram

தனது ஒவ்வொரு பிறந்த தினத்தன்றும் கண்தான முகாம் அமைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர், ‘கற்க கசடற’ மற்றும் ‘பச்சைப் புரட்சி’ என்ற இரு சமூகநலத் திட்டங்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளார்.

Actor Vikram Film List in Tamil

ஆண்டு திரைப்படம்
1990 என் காதல் கண்மணி
1991 தந்துவிட்டேன் என்னை
1992 காவல் கீதம்
1992 மீரா
1993 துருவம்
1993 சிருநவ்வுலா வரமிஸ்தாவா
1993 மாஃபியா
1994 சைன்யம்
1994 பங்காரு குடும்பம்
1994 புதிய மன்னர்கள்
1995 ஸ்ட்ரீட்
1995 அடல்லா மாஜகா
1996 மயூர ந்ரிடம்
1996 ஊஹா
1996 மெருபு
1996 ராசபுத்திரன்
1997 இது ஒரு சிநேஹகதா
1997 உல்லாசம்
1997 குரல்ல ராஜ்ஜியம்
1998 கண்களின் வார்த்தைகள்
1999 ஹவுஸ் புள்
1999 சேது
2000 ரெட் இந்தியன்ஸ்
2001 இந்த்ரியம்
2001 9 நேலாலு
2001 யூத்
2001 விண்ணுக்கும் மண்ணுக்கும்
2001 தில்
2001 காசி
2002 ஜெமினி
2002 சாமுராய்
2002 கிங்
2003 தூள்
2003 காதல் சடுகுடு
2003 சாமி
2003 பிதாமகன்
2004 அருள்
2005 அந்நியன்
2005 மஜா
2008 பீமா
2009 கந்தசாமி
2010 ராவணன்
2010 ராவன்
2011 தெய்வத்திருமகள்
2011 ராஜபாட்டை
2012 தாண்டவம்
2013 டேவிட்
2015
2015 10 எண்றதுக்குள்ள
2016 இருமுகன்
2018 ஸ்கெட்ச்
2018 சாமி 2
2019 கடாரம் கொண்டான்
2020 கோப்ரா

actor vikram

Actor Vikram Dubbing Artists Movie list in Tamil

ஆண்டு திரைப்படம் குரல் கொடுக்கப்பட்டவர்
1993 அமராவதி அஜித் குமார்
1993 புதிய முகம் வினீத்
1994 பாச மலர்கள் அஜித் குமார்
1994 காதலன் பிரபுதேவா
1995 குருதிப்புனல் ஜான் இடத்தட்டில்
1996 காதல் தேசம் அப்பாஸ்
1996 கருப்பு ரோஜா அமர் சித்திக்
1997 மின்சார கனவு பிரபுதேவா
1997 வி.ஐ.பி அப்பாஸ்
1998 சத்யா ஜே. டி. சக்ரவர்த்தி
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அப்பாஸ்

actor vikram

List of Songs Sung by Vikram in Tamil Movies

ஆண்டு திரைப்படம் பாடல்கள்
2002 ஸ்ரீ “யாமிருக்க பயமேன்”
2002 ஜெமினி “ஓ போடு”
2009 கந்தசாமி “எக்ஸ்க்யூஸ் மி”

“இதெல்லாம் டூப்பு”

“மேம்போ மாமியா”

“மியாவ் மியாவ்”

2010 மதராசபட்டினம் “மேகமே ஒ மேகமே”
2011 தெய்வத்திருமகள் “கதை சொல்ல போரேன்”

“ப ப பாப்பா”

2011 ராஜபாட்டை “லட்டு லட்டு”
2013 டேவிட் “மரிய பிதாசே”
2019 கடாரம் கொண்டான் “தீசுடர் குனியுமா”

actor vikram

Actor Vikram Awards and Recognition

  •  ஃபிலிம்ஃபேர் விருதுகள் சிறந்த நடிகருக்காக பெற்றது – சேது – (1999), காசி – (2௦௦1), பிதாமகன் – (2௦௦3), சாமி – (2௦௦3), அந்நியன் – (2௦௦5), ராவணன் – (2௦1௦), தெய்வத் திருமகள் – (2௦11)
  • 2003 – ‘பிதாமகன்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருதை’ வென்றார்.
  • தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருதுகளான ‘சிவாஜி கணேசன் விருதை’ 2௦௦6 ஆம் ஆண்டிலும், ‘சேது’ படத்திற்காக ‘ஸ்பெஷல் ஜூரி விருதை’ 1999 ஆம் ஆண்டிலும், ‘பிதாமகன்’ படத்திற்காக ‘சிறந்த நடிகருக்கான விருதை’ 2003 ஆம் ஆண்டிலும் வென்றார்.
  • 2011 – ‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பிற்காக, சிறந்த நடிகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ வழங்கப்பட்டது.
  • 2011 – ‘கௌரவ டாக்டர் பட்டத்தை’ ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ அவருக்கு வழங்கி கௌரவித்தது.

Actor Vikram Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia