Annan Ennada Thambi Ennada cover

Movie: Annan Ennada Thambi Ennada (1992)
Music: Gyan Varma
Lyricists: Aabavanan
Singers: B. Sasirekha and Vidya

Added Date: Feb 11, 2022

பெண்: சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ

பெண்: தானே பொறக்குது பாட்டு மானே நீ பொறந்தது கேட்டு

பெண்: சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ..ஓ.. துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ..ஓ..

குழு: {வளத்த மரம் பூத்துடுச்சு பூத்தமரம் காச்சுடுச்சு காய்க்கும் வர காத்திருந்த மன்னவனே கனி பறிக்கும் போது கசக்குதுன்னு சொன்னவனே} ( 2 )

பெண்: பொண்ணு பொறந்தது கண்ணு நெறஞ்சது நீ பாரம்மா அந்த மண்ணுக்குள்ள இந்த பொண்ணு குணங்கள் நீ கேளம்மா ஆராரோ..ஓ….ஆராரோ..ஆரிரோ..

பெண்: பொண்ணுன்னா பொறுமையம்மா பொறுத்தவரை வாழ்க்கையம்மா நீ வாழணும் புரிஞ்சு நீ வாழணும் பொறந்த வீட்டு பெருமையெல்லாம் புகுந்த வீட்டு வாழ்க்கையில்தான் நீ வாழணும் தெரிஞ்சு நீ வாழணும்

பெண்: சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ..ஓ.. துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ..ஓ..

குழு: {கருசக் காட்டு புழுதியிலே கதிரறுக்க போகையிலே புருசனுக்கு காத்திருந்தா பொன்னம்மா ஆசை புழுதியோட போன மாயம் என்னம்மா} ( 2 )

பெண்: சொந்த பந்தமெல்லாம் சுத்தியிருப்பத நீ பாரம்மா உன்ன சுத்தியிருப்பவர் மெச்சி மகிழ்ந்திட நீ வாழம்மா ஆராரோ..ஓ….ஆராரோ..ஆரிரோ..

பெண்: ஆம்பளையே அவசரம்தான் அனுசரிப்பது பொம்பளத்தான் நீ வாழணும் புரிஞ்சு நீ வாழணும் புருசனோட பெருமையெல்லாம் பொண்டாட்டி கையிலத்தான் நீ வாழணும் தெரிஞ்சு நீ வாழணும்

பெண்: சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ..ஆ… துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ

பெண்: தானே பொறக்குது பாட்டு மானே நீ பொறந்தது கேட்டு

பெண் மற்றும்
குழு: சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ.. துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ..ஓ..