Lyricist Na. Muthukumar

சின்ன சின்ன கனவுகள் பாடல் வரிகள்

சின்ன சின்ன கனவுகள் சின்ன சின்ன குறும்புகள்
எல்லாம் சேர்ந்து செய்த வீடு இது சின்ன சின்ன சிரிப்புகள்
சின்ன சின்ன சண்டைகள் சங்கீதமாய் மாறும் இடம் இது

இந்த கூட்டுக்குடும்பத்தில் வாழ சொர்க்கம் ஏங்குமே
இது வீட்டுக்குள்ளே வேடந்தாங்கல் இதுதான் சந்தோசம்
இதுதான் உற்சாகம்  இதுதான் சந்தோசம்

இதுதான் உற்சாகம்  இதுதான் சந்தோசம்
இதுதான் உற்சாகம் இதுதான் சந்தோசம்
இதுதான் உற்சாகம்

சின்ன சின்ன கனவுகள் சின்ன சின்ன குறும்புகள்
எல்லாம் சேர்ந்து செய்த வீடு இது சின்ன சின்ன சிரிப்புகள்
சின்ன சின்ன சண்டைகள் சங்கீதமாய் மாறும் இடம் இது

அணில் வந்து விளையாடும் தாழ்வாரம் 
அன்புதானே நாங்கள் பாடும் தேவாரம்
அணில் வந்து விளையாடும் தாழ்வாரம்

அன்புதானே நாங்கள் பாடும் தேவாரம்
ஆகாய வெண்ணிலாவில் வெளிச்சம் கொஞ்சம் வாங்கி
அணையாத விளக்கெரியும் எங்கள் வீட்டு மாடம்

இது போதும் இதுபோதும் வேறு என்ன வேண்டும்
இங்கு வாழும் நாளெல்லாம் திருநாளாய் மாறும்

சின்ன சின்ன கனவுகள் சின்ன சின்ன குறும்புகள்
எல்லாம் சேர்ந்து செய்த வீடு இது சின்ன சின்ன சிரிப்புகள்
சின்ன சின்ன சண்டைகள் சங்கீதமாய் மாறும் இடம் இது

புன்னகையால் நாம் போடும் பூந்தோட்டம்
பூச்செடிகள் கடன்கேட்டு கை நீட்டும்
புன்னகையால் நாம் போடும் பூந்தோட்டம்

பூச்செடிகள் கடன்கேட்டு கை நீட்டும்
இறைவனுக்கு முகவரிகள் எங்கும் என்று கேட்டால்
இங்கிருக்கும் உறவுகளை வந்து பார்க்க சொல்வோம்

பொன் வேண்டாம் பொருள் வேண்டாம் பந்தபாசம் போதும்
பூமியிலே நாங்கள் வாழும் வாழ்க்கை அர்த்தமாகும்

சின்ன சின்ன கனவுகள் சின்ன சின்ன குறும்புகள்
எல்லாம் சேர்ந்து செய்த வீடு இது சின்ன சின்ன சிரிப்புகள்
சின்ன சின்ன சண்டைகள் சங்கீதமாய் மாறும் இடம் இது

இந்த கூட்டுக்குடும்பத்தில் வாழ சொர்க்கம் ஏங்குமே
இது வீட்டுக்குள்ளே வேடந்தாங்கல் இதுதான் சந்தோசம்…
இதுதான் உற்சாகம் இதுதான் சந்தோசம்

இதுதான் உற்சாகம் இதுதான் சந்தோசம்
இதுதான் உற்சாகம் இதுதான் சந்தோசம்
இதுதான் உற்சாகம்…

Movie: Vaazhthugal
Lyrics: Na. Muthu Kumar
Music: Yuvan Shankar Raja

Leave a Reply

Your email address will not be published.