Bandham cover

Movie: Bandham (1985)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: பந்தம் பந்தம் பந்தம்

ஆண்: பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம்

ஆண்: கருவறை தொடங்கி காலங்கள் தோறும் கடவுள் மாட்டிய கை விலங்கு கருவறை தொடங்கி காலங்கள் தோறும் கடவுள் மாட்டிய கை விலங்கு இது ஒருவரையொருவர் பிரிந்து விடாமல் உறவுகள் பூட்டிய கால் விலங்கு உறவுகள் பூட்டிய கால் விலங்கு

ஆண்: பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம்

ஆண்: தகப்பன் மகளின் பந்தம் எல்லாம் பிறந்தவர் வீட்டில் வாழும் வரை தகப்பன் மகளின் பந்தம் எல்லாம் பிறந்தவர் வீட்டில் வாழும் வரை அவள் நல்லவன் ஒருவன் நாயகியானால் இல்லற பந்தம் இறுதிவரை இல்லற பந்தம் இறுதிவரை