Annai cover

Movie: Annai (1962)
Music: R. Sudharsanam
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பெண்: பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள்

ஆண்: அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பெண்: பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள்

பெண்: காவியக் கண்ணகி இதயத்திலே ஆஅஆ..ஆஅ..ஆஅ…ஆஅ… காவியக் கண்ணகி இதயத்திலே கனிந்தவர் யார் இளம் பருவத்திலே

ஆண்: கோவலன் என்பதை ஊர் அறியும் கோவலன் என்பதை ஊர் அறியும் சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்

இருவர்: அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள்

ஆண்: பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் ஆஹ்ஹ.ஓஹோ..
பெண்: ஓஹோஹோ
ஆண்: ஹா…ஹா..ஆஅ.. பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும்

பெண்: இளையவர் என்றால் ஆசை வரும் இளையவர் என்றால் ஆசை வரும் முதியவர் என்றால் பாசம் வரும் முதியவர் என்றால் பாசம் வரும்

பெண்: ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
ஆண்: உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
பெண்: இருவர் என்பது மாறிவிடும் இருவர் என்பது மாறிவிடும் இருவர்: இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்

இருவர்: அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள்