Lyricist Palani Bharathi

அம்புலி மாமா அம்புலி மாமா பாடல் வரிகள்

அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே

அழகி பேரழகி எதிரில் நின்றாளே
அழகன் பேரழகன் எனை வென்றாளே
சுகமாய் ஹேய் கொன்றாளே

அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே

ஒரு குடை பிடித்து இருவரும் நடப்போம்
வெயிலிலும் ஹோய் மழையிலும்
அழகிய ஜோடி பரிசுகள் பெறுவோம்
தினம் தினம் ஹோய் தினம் தினம்

உறக்கம் விழிகளை மூடிடும் போதும்
கனவில் இமைகளை திறப்போமே
முத்ததில் இரவினை மூழ்கடிப்போமே
இருமுறை குளிப்போமே….ஹேய்

அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே

சிவன் ஒரு பாதி உமை ஒரு பாதி கோயிலில் ஹேய் கோயிலில்
இவன் ஒரு பாதி அவள் ஒரு பாதி வீட்டினில் என் வீட்டினில்

உலையில் அரிசியை போட்டிடும் போது
பக்கதில் இருந்து உதவனுமே
குழந்தை பெறுகிற நேரத்தில் நானும்
அருகினில் இருக்கணுமே

அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே

அழகி பேரழகி எதிரில் நின்றாளே
அழகன் பேரழகன் எனை வென்றாளே
சுகமாய் ஹேய் கொன்றாளே

அம்புலி மாமா அம்புலி மாமா அம்புலி மாமா நான்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தளம் பற்றி கொண்டேனே…

Movie: Perazhagan
Lyrics: Palani Bharathi
Music: Yuvan Shankar Raja