Asuravadham cover

Movie: Asuravadham (2018)
Music: Govind Vasantha
Lyricists: Karthik Netha
Singers: Ananthu

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் அலாதி அன்பை நீங்கி போகிறேன் அனாதை வாழ்வை மீண்டும் வாழ போகிறேன் உள் சாகிறேன்

ஆண்: தினம் அன்பே

ஆண்: ஓ கண்ணீரில் மூழ்கும் பாறை ஆகிறேன் என்னோடு நானே கேள்வி ஆகி போகிறேன் உள் வேகிறேன்

ஆண்: தினம் அன்பே

ஆண்: ஏனோ வாழ்வே ஓடோடி எல்லாம் ஏங்கி போராடி யார் வாழ்வாரோ என் வாழ்வை யார் பார்ப்பாரோ என் பூவை

ஆண்: மூர்க்கமாய் இந்த வாழ்க்கை பந்தாடுதே ஏக்கமாய் ஒரு ஜீவன் பின்னோடுதே சாம்பல் காட்டில் அலைந்தும் சிறு காகம் கோட்டை அடைந்திடுமே தேடல் தீரும் ஒரு நாள் இவன் பாசம் தானாய் திரும்பிடுமே

ஆண்: ஓ கனவில் கூட தூக்கம் இல்லையே துஞ்சது காணும் காட்சி யாவும் பூ முகம் உன் ஞாபகம் கண்ணே கண்ணே

ஆண்: ஓ எல்லாமே என்னை கூறு போடுதே ஒன்றாக வாழ்ந்த காலம் கொஞ்சம் தேற்றுதே வலி மாற்றுதே அன்பே அன்பே

ஆண்: தோளில் சாய்ந்தே நீ பேசும் பொன்நாள் ஏந்தி நான் வாழ்வேன் வருவேனே நான் என் பூவே உன் மடி சாயும் என் வாழ்வே