Alaya Deepam cover

Movie: Alaya Deepam (1984)
Music: M. S. Viswanathan
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி ராதா ராதா உன்னை நீ தா….ஆ..ஆ..
பெண்: நானே என்னை தரும் ஹாஹ் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானா..ஆ..

ஆண்: மோகம் தீயானதே
பெண்: ஆஹ்
ஆண்: தேகம் சூடானதே.
பெண்: ஆஹான்

ஆண்: அடி ராதா ராதா உன்னை நீ தா….ஆ..ஆ..
பெண்: நானே என்னை தரும் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானா.ஆ…ஆ..
ஆண்: மோகம் தீயானதே தேகம் சூடானதே.

பெண்: பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில் பஞ்சணை தேடாத நெஞ்சம் ஏது
ஆண்: பத்து விரல் இணைந்து சித்திரங்கள் வரைந்து பார்ப்பது போல் இன்ப வேதனை ஏது

பெண்: {கையும் கையும் மெய்யும் மெய்யும் சொந்தம் கொண்டாட
ஆண்: கள்ளில் ஊறும் உள்ளம் ரெண்டும் வானில் நின்றாட..} (2)

ஆண்: அடி ராதா ராதா அடி ராதா ராதா உன்னை நீ தா….ஆ..ஆ..
பெண்: நானே என்னை தரும் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானா..ஆ..ஆ
ஆண்: மோகம் தீயானதே தேகம் சூடானதே.

ஆண்: சின்னஞ்சிறு இடையில் என்ன இது புதையல் சோதனை போடாமல் நான் விடமாட்டேன்
பெண்: காலம் உள்ள வரையில் நெஞ்சமென்னும் சிறையில் உன்னையும் பூட்டாமல் நான் விடமாட்டேன்

ஆண்: {நெஞ்சம் எங்கும் சந்தம் சிந்தும் காதல் சங்கீதம்
பெண்: மன்னன் உந்தன் கைகள் தொட்டால் எங்கும் செந்தூரம்.} (2)

ஆண்: அடி ராதா ராதா அடி ராதா ராதா உன்னை நீ தா….ஆ..ஆ..
பெண்: நானே என்னை தரும்
ஆண்: லல லலல்லா
பெண்: நாளும் நாளை வரும்
ஆண்: லல லலல்லா
பெண்: இது வேகம் காட்டும் வேளைதானா..ஆ..ஆ
ஆண்: மோகம் தீயானதே தேகம் சூடானதே.