actress silk smitha images

நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு

Name Silk Smitha
Born Name Vijayalakshmi
Born Dec 02, 1960
Died Sep 23, 1996
Occupation Actress
Parents Name Ramallu (Father)

Sarasamma (Mother)

சில்க் ஸ்மிதா என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வந்தார், இவரது வாழ்க்கையை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டு தி டர்டி பிக்சர் என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படம் இவரது பிறந்தநாளான டிசம்பர் 2 அன்று வெளியானது.

actress silk smitha images

1970-களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.

அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

Actress Silk Smitha Childhood Days in Tamil

இந்தியாவின் ஆந்திரமாநிலம் “ஏலூரு” என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும். ‘விஜயலட்சுமி’ என்ற இயற்பெயர்கொண்ட அவர், 1960  ஆம் ஆண்டு டிசம்பர் 02  தேதி இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.

actress silk smitha images

Actress Silk Smitha Early Life in Tamil

இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய பள்ளிப்படிப்பை வறுமையின் காரணமாக நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இவருடைய கண்கள் பலரையும் மயக்கும் வசீகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

Actress Silk Smitha Entry in Cini Field in Tamil

திரைப்படத் துறையில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ‘விஜயலட்சுமி’, தமிழ் திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற தமிழ் திரைப்படத்தில் சிலுக்கு என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அவர், தமிழ் திரைப்படத்துறையில் புகழையும் தேடிக்கொண்டார்.

actress silk smitha images

அன்று வரை ‘விஜயலட்சுமி’ எனப்பட்ட இவர், இந்தப் படத்தில் இவரை ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில் அறிமுகமானார். வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். வண்டிச்சக்கரத்தில் நடித்தபின்பு இவரது கதாபாத்திரமான சில்க் என்கிற பெயரும் ஸ்மிதா என்கிற பெயரும் இணைந்து இவரது அடையாளம் ஆயின.

பிறகு, ஸ்மிதா “இணையே தேடி” என்கிற திரைப்படம் மூலம் 1979இல் மலையாள திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் கிடைத்த மாபெரும் வெற்றியினால் ஸ்மிதா புகழின் உச்சத்துக்கே சென்றார். அந்த திரைப்படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் தாக்கத்தின் காரணமாக அவரால் வேறு எந்த வித வித்தியாசமான கதாபாத்திரங்களை எளிதாகப் பெறமுடியவில்லை. பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்தார்.

actress silk smitha images

இவரது கவர்ச்சியான தோற்றத்திற்கும் ‘மூன்று முகம்’, ‘சகலகலா வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும், கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சிப்புயலாக வலம்வந்தார்.

இவரது கவர்ச்சி நடனம் மட்டுமே இடம்பெற்ற அமரன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை ஈட்டின. 1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார். இவர் நடிப்பில் பல கதாபத்திரத்தினை ஏற்று நடித்திருந்தாலும், நாளிதழ்களும், திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின.

actress silk smitha images

இருப்பினும், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை’, ‘லயனம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்குக் கவர்ச்சி மட்டுமின்றி, அனைத்து விதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என்பதனை நிரூபித்தார்.

Actress SilkSmitha Important Film List in Tamil

வருடம்

படம்

1979 இணையே தேடி
1979 வண்டி சக்கரம்
1981 அலைகள் ஓய்வதில்லை
1981 சீதகொக சிலுக
1982 எமகின்கருது
1982 மூன்றாம் பிறை
1982 சகலகலா வல்லவன்
1982 பட்டணத்து ராஜாக்கள்
1982 தீர்ப்பு
1982 தனிக்காட்டு ராஜா
1982 ரங்கா
1982 சிவந்த கண்கள்
1982 பார்வையின் மறுபக்கம்
1983 மூன்று முகம்
1983 பாயும் புலி
1983 துடிக்கும் கரங்கள்
1983 சத்மா
1983 தாய் வீடு
1983 பிரதிக்னா
1983 தங்க மகன்
1983 கைதி
1983 ஜீத் ஹமாரி
1983 ஜானி தோஸ்த்
1983 ஆட்டக்கலசம்
1983 ஈட்டப்புளி
1983 சில்க் சில்க் சில்க்
1983 சூரக்கோட்டை சிங்கக்குட்டி
1983 குடசாரி No.1
1983 ரோஷகடு
1984 சேலஞ்ச்
1984 ருஸ்தும்
1984 நீங்கள் கேட்டவை
1984 வாழ்க்கை
1984 பிரசண்ட குள்ள
1985 ஒட்டயம்
1985 ரிவேஞ்ச்
1985 சட்டம்தோ போராட்டம்
1985 ஸ்ரீ தத்தா தர்ஷனம்
1986 ராக்ஷசுடு
1987 ஆளப்பிறந்தவன்
1989 மிஸ் பமீலா
1989 லயனம்
1989 அன்று பெய்த மழையில்
1989 அதர்வம்
1989 பிக் பாக்கெட்
1989 சொந்தக்காரன்
1990 அவசர போலீஸ் 100
1990 சண்டே 7 PM
1990 பம்ம மாட்ட பங்காரு பாட்ட
1991 ஆதித்யா 369
1991 தாலாட்டு கேட்குதம்மா
1991 சைதன்யா
1991 தம்பிக்கு ஒரு பாட்டு
1991 இதயம்
1992 நாடோடி
1992 ஹள்ளி மேஷ்ற்று
1992 அந்தம்
1993 சபாஷ் பாபு
1993 பாவ பவமரிடி
1993 மாபியா
1993 உள்ளே வெளியே
1993 அளிமைய
1993 ரக்ஷனா
1993 முட மேஸ்த்ரி
1994 ஒரு வசந்த கீதம்
1994 விஜய்பாத்
1994 பல்னடி பௌருஷம்
1994 மரோ கூட் இந்தியா
1995 ஸ்படிகம்
1995 தும்போலி கடப்புரம்
1996 லக்கி மேன்
1996 கோயம்புத்தூர் மாப்பிள்ளை

Actress Silk Smitha Death

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். இந்த நிகழ்விற்கு முன்பு இவர் திரைப்படத் தயாரிப்பாளராக முயற்சித்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும், மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட குடிப்பழக்கத்தினாலும், மன இறுக்கத்திற்கு ஆளானதாக நம்பப்படுகிறது. ஆனாலும் இவரது மரணத்தினைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

actress silk smitha images

இவருடைய மறைவிற்குப் பிறகு “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார்.

2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்தகையை சிறப்புமிக்க சில்க் ஸ்மிதாவின் அபார நடனத்திறமையும், கண்களின் வசீகரமும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டுச்சென்றுள்ளார் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

Actress Silk Smitha Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia