lyricist na muthukumar images (1)

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாறு

Name Na. Muthukumar
Born Name Na. Muthukumar
Born 12 July, 1975
Died 14 August, 2016
Occupation Poet, Lyricist, Writer, Novelist
Parents Name Nagarajan (Father)

Sivalakshmi (Mother)

Spouse Name Jeevalakshmi Muthukumar
Children Aadhavan (Son)

Yogalaksmi (Daughter)

வரிகளில் வாழும் நா. முத்துக்குமார் தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறை பெற்றுள்ளார். பறவையே எங்கு இருக்கிறாய், நல்ல நண்பன், ஒருநாளில் வாழ்க்கை, ஓர் ஆயிரம் யானை, கனவுகள் பூக்கும், சுட்டும் விழி சுடரே, பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட பாடல்கள் படைத்துள்ளார்.

lyricist na muthukumar images

Lyricist Na. Muthukumar Childhood Days in Tamil

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் ஜூலை 12, 1975-ம் ஆண்டு பிறந்தவர் நா முத்துக்குமார்.  சிறு வயதிலேயே தாயை இழந்த அவர், தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்தார்.  காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் கல்விப் படிப்பை முடித்த முத்துக்குமாருக்கு சிறு வயதில் இருந்த தமிழ் ஆர்வம் மிகுதி. அவரது தந்தையார், வீட்டிலேயே நூலகம் அளவுக்கு புத்தகங்கள் வைத்திருந்தார். அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படிப்பார் முத்துக்குமார்.

lyricist na muthukumar images

Lyricist Na. Muthukumar Entry in Cini Field in Tamil

திரைப்பட இயக்குநராகவேண்டும் என்பதுதான் முத்துக்குமாரின் ஆரம்பகால லட்சியமாக இருந்தது.  பிரபல இயக்குநர் மறைந்த பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதே நேரம், சிறந்த கவிதைகளையும் எழுதி வந்தார். அது தொகுப்புகளாகவும் வெளியானது.

கவிஞர் அறிவுமதியின் அறிமுகம் கிடைக்கவே, அவர் மூலம் சில திரைப்பாடல்கள் வாய்ப்புகள் கிடைத்தன. இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இயக்கிய வீரநடை படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார் நா. முத்துக்குமார்.  அதன் பிறகு ஏராளமான திரைப்பாடல்களை எழுதினார்.  கடந்த சில வருடங்களாகவே, ஒவ்வொரு வருடமும் அதிக பாடல் எழுதியவர் என்கிற பெருமையை பெற்றுவந்தார் நா.முத்துக்குமார்.

lyricist na muthukumar images

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் அத்தனைப் பேருடனும் பணியாற்றியவர் நா முத்துக்குமார். இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார், ஹாரிஸ் ஜெயராஜ் என அனைவரும் நா.முத்துக்குமாரை கொண்டாடினார்கள்.

lyricist na muthukumar images

இதில் யுவன் சங்கர் ராஜா மற்றும் நா முத்துகுமார் கூட்டணி ஒரு பெரிய வெற்றி கூட்டணியாகவே இருந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை படைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் தங்க மீன்கள் படத்துக்காக இவர் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்… ‘ பாடலுக்கு முதல் தேசிய விருதினை வென்றார். அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகே’… பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினை வென்றார்.

lyricist na muthukumar images

நா.முத்துக்குமார் தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் முதன்மை பாடலாசிரியராகத் திகழ்ந்தா இவர், சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றார், அங்கு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

lyricist na muthukumar images

பாடல்கள் எழுதுவது மட்டுமல்லாமல், சில கவிதை தொகுப்புகளையும் படைத்துள்ளார். நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன், ஆணா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால கண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் முதலிய படைப்புகளை படைத்துள்ளார்.

Lyricist Na. Muthukumar Marriage Life in Tamil

இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் தேதி, வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.

lyricist na muthukumar images

Lyricist Na. Muthukumar Death

41 வயதை நிரம்பிய இவர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் ஆகஸ்ட் 14, 2016 காலையில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றியதால் இறந்தார்.

Lyricist Na. Muthukumar Important Songs in Tamil

ஆண்டு

திரைப்படம்

பாடல்கள்

1999 மின்சார கண்ணா ஓ அங்கில்
1999 ஹலோ சலாம் குலாமு
1999 இறனியன் சந்திரனே சாட்சி & என் மாமன் மதுரை
1999 உன்னருகே நானிருந்தால் சின்ன சின்ன பூவே
2000 வானத்தைப் போல தாவணியே என்னை மயக்கிறயே & எங்கள் வீட்டில் எல்லா
2000 ஏழையின் சிரிப்பில் சக்கரவள்ளி
2001 நந்தா ஓர் ஆயிரம் யானை
2002 பகவதி சாயோ சாயோ
2002 ஏப்ரல் மாதத்தில் கனவுகள் பூக்கும்
2002 ரன் தேரடி வீதியில்
2003 தூள் கொடுவா மீசை
2003 வசீகரா ஒரு தடவை, பூப்போல தீப்போல & வேணா வேணா
2003 சாமி திருநெல்வேலி அல்வாடா, பிடிச்சிருக்கு & வேப்பமரம் புளியமரம்
2003 பார்த்திபன் கனவு தீராத டும்
2003 காதல் கொண்டேன் தேவதையை கண்டேன், நெஞ்சோடு, தொட்டு தொட்டு & 18 வயதில்
2003 திருடா திருடி ஆயுர்வேத அழகி
2003 திருமலை தாம்தக்க தீம்தக்க
2003 பிதாமகன் கொடி ஏத்தி வைப்போம்
2004 கோவில் காலேஜ்க்கு போவோம்
2004 புதுக்கோட்டையிலிருந்து சரவணன் புதுக்கோட்டை சரவணன்
2004 தென்றல் பச்சைக்கிளி
2004 கில்லி சூர தேங்கா
2004 அருள் உக்கடத்து பப்படமே & புண்ணாக்குனு
2004 கிரி அட்ரா சக்க, ரெண்டு காலுடா & ஒப்பனக்கார வீதியிலே
2004 எம். குமரன் S/O மகாலட்சுமி சென்னை செந்தமிழ்
2004 7ஜி ரயின்போ காலணி அனைத்து பாடல்களும்
2004 மன்மதன் வானமென்ன உயரங்காட்டு & காதல் வளர்த்தேன்
2004 காதல் அனைத்து பாடல்களும்
2005 ஐயா அத்திரி பத்திரி, அய்யாத்துரை (சோகம்) & Thenam Ayyanu
2005 மாயாவி காத்தாடி போலே
2005 சந்திரமுகி கொக்கு பற பற
2005 சச்சின் கண்மூடி திறக்கும்போதே
2005 ஜித்தன் கோயமுத்தூர் பொண்ணு
2005 அன்னியன் காதல் யானை
2006 புதுப்பேட்டை அனைத்து பாடல்களும்
2006 உனக்கும் எனக்கும் ஆகாயம் இத்தனை நாள், கிளியே கிளியே & பூப்பறிக்க நீயும் போகாதே
2006 டிஸ்யூம் கிட்ட நெருங்கிவாடி
2006 தம்பி கனவா என்று, என் காதல், பூவனத்தில் மரம் & என்னம்மா தேவி ஜக்கம்மா
2006 வெயில் ‘Sethavadam’ பாடல் தவிர்த்து அனைத்து பாடல்களும்
2007 சிவாஜி பல்லேலக்கா.. காவிரி ஆறும் & சிவாஜி தீம்
2007 சத்தம் போடாதே அனைத்து பாடல்களும்
2007 கற்றது தமிழ் அனைத்து பாடல்களும்
2007 பொல்லாதவன் மின்னல்கள் கூத்தாடும்
2007 வேல் இந்த ஊரில், உன்ன போல, ஆயிரம் ஜன்னல், கோவாக்காரக்கிளியே
2007 ஓரம் போ ‘ஓரம் போ தீம்’ தவிர்த்து அனைத்து பாடல்களும்
2007 எவனோ ஒருவன் உனது எனது
2007 கல்லூரி அனைத்து பாடல்களும்
2008 பீமா முதல் மழை
2008 யாரடி நீ மோகினி அனைத்து பாடல்களும்
2008 சந்தோஷ் சுப்பிரமணியம் அடடா அடடா & உயிரே உயிரே பிரியாதே
2008 தாம் தூம் ஆழியிலே முட்குளிக்கும் & அன்பே என் அன்பே
2008 சக்கரகட்டி ஏலே, ஐ மிஸ் யூ & டேக்சி டேக்சி
2008 வாரணம் ஆயிரம் ஏத்தி ஏத்தி
2009 சிவா மனசுல சக்தி அனைத்து பாடல்களும்
2009 அயன் ஓ சூப்பர் நோவா, பலபலக்கிற பகலாநீ & விழி மூடி யோசித்தால்
2010 அங்காடித் தெரு அனைத்து பாடல்களும்
2010 பையா அனைத்து பாடல்களும்
2010 களவாணி அனைத்து பாடல்களும்
2010 மதராசபட்டினம் அனைத்து பாடல்களும்
2010 பாணா காத்தாடி என் நெஞ்சில் & ஒரு பைத்தியம் பிடிக்குது
2010 நான் மகான் அல்ல வா வா நிலவு & ஒரு மாலை நேரம்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் அனைத்து பாடல்களும்
2011 சிறுத்தை நான் ரொம்ப ரொம்ப & செல்லம் வாடா செல்லம்
2011 வானம் வானம், வூ யம் ஐ & நோ மணி நோ மணி
2011 எங்கேயும் காதல் திமு திமு
2011 அவன் இவன் அனைத்து பாடல்களும்
2011 7ஆம் அறிவு முன் அந்தி & எல்லேலம்மா
2011 தெய்வ திருமகள் அனைத்து பாடல்களும்
2011 வெப்பம் அனைத்து பாடல்களும்
2012 நண்பன் ஹார்ட்டிலே பேட்டரி & நல்ல நண்பன்
2012 பில்லா II அனைத்து பாடல்களும்
2012 மாற்றான் ரெட்டை கதிரே
2012 துப்பாக்கி வெண்ணிலவே
2013 மூன்று பேர் மூன்று காதல் அனைத்து பாடல்களும்
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா ஒரு பொரம்போக்கு & தெய்வங்கள் எல்லாம்
2013 தலைவா அனைத்து பாடல்களும்
2013 தங்க மீன்கள் அனைத்து பாடல்களும்
2014 சைவம் அனைத்து பாடல்களும்
2014 அஞ்சான் ஏக் தோ தீன் சார் பாஞ்ச்
2015 பாபநாசம் அனைத்து பாடல்களும்
2015 ஆவி குமார் அனைத்து பாடல்களும்
2015 இது என்ன மாயம் அனைத்து பாடல்களும்
2016 சேதுபதி அனைத்து பாடல்களும்
2016 தெறி என் ஜீவன்
2017 யாக்கை நீ என் கண்கள்
2017 தரணி அனைத்து பாடல்களும்
2017 திட்டிவாசல் அனைத்து பாடல்களும்
2018 2.0 புல்லினங்கால்
2019 சர்வம் தாளமயம் மாயா மாயா
2019 பெட்டிக்கடை சுடலமாட சாமிக்கிட்ட
2019 ஜூலை காற்றில் மேற்கிலே மேற்கிலே & கண்களின் ஓரமாய்

 Lyricist Na. Muthukumar Publications in Tamil

  • நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)[9]
  • கிராமம் நகரம் மாநகரம்[10]
  • பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
  • ஆணா ஆவண்ணா (கட்டுரைகள்)
  • என்னை சந்திக்க கனவில் வராதே
  • சில்க் சிட்டி (நாவல்)
  • பால காண்டம் (கட்டுரைகள்)
  • குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
  • வேடிக்கை பார்ப்பவன் (கட்டுரைகள்)
  • தூசிகள் (கவிதைகள்)
  • அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்)

Lyricist Na. Muthukumar Awards and Recognition in Tamil

  • 2005 ஆம் ஆண்டு கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது
  • 2006 ஆம் ஆண்டு வெயில் திரைப்படத்திகாக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது
  • 2009 ஆம் ஆண்டு அயன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.
  • 2013 ஆம் ஆண்டு தங்க மீன்கள் படத்தில் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
  • 2014 ஆம் ஆண்டு சைவம் திரைப்படத்தில் “அழகே அழகே” பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.

Lyricist Na Muthukumar Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia