actor surya images

நடிகர் சூர்யாவின் வாழ்க்கை வரலாறு

Name Surya
Born Name Saravanan
Age 46 – (July 23, 1975)
Occupation Actor, Producer, Television Host
Parents Name Sivakumar (Father)

Lakshmi (Mother)

Spouse Name Jyothika
Children Diya (Daughter)
Dev (Son)

நடிகர் சூர்யா சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராகவும், அகரம் என்ற கல்வி அறக்கட்டளை மூலம் பல மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி அளித்து வருகிறார். இதுமட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். ஒரே படத்திலேயே மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து சாதனைப் படைத்துள்ளார்.

actor surya childhood images

Actor Surya Childhood Days in Tamil

சூர்யா அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நடிகர் சிவக்குமாருக்கும், லக்ஷ்மிக்கும் மகனாக ஜூலை மாதம் 23 ஆம் தேதி, 1975 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு கார்த்தி என்று ஒரு சகோதரனும், பிருந்தா என்ற சகோதரியும் உள்ளனர். அவரது சகோதரரான கார்த்தியும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.

actor surya family images

தன்னுடைய பள்ளிக் கல்வியை சென்னையில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியிலும், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியிலும் கற்றார். பின்னர், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

Actor Surya Early Life in Tamil

நடிகரென்ற பெருமையோ, மமதையோ சிரிதளுவும் இல்லாத சிவகுமார் அவர்கள், தனது பிள்ளைகளையும் அவ்வாறே வளர்த்தார் என்பதற்கு சூர்யா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், ஆடை தயாரிப்புத் தொழிற்துறை மீது மிகுந்த ஆர்வமுடையவராகக் காணப்பட்டதால், ஒரு முன்னணி நடிகரின் மகனென்ற அங்கீகாரத்தை வெளிக்காட்டாமல், ஒரு தொழிற்சாலையில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சேர்ந்தார். ஆறு மாதங்கள் அங்கு பணியாற்றிய அவரை, இயக்குனர் வசந்த், அவரின் அடுத்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யவே, அவ்வேலையில் இருந்து விலகிக் கொண்டார்.

actor surya childhood images

Actor Surya Marriage Life in Tamil

நடிகர் சூர்யா தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து மணந்தார். அவர்கள் இருவரும் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘ஜூன் ஆர்’ மற்றும் ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்த போது, அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததால், பல ஆண்டுகளாக அவர்கள் பெற்றோரின் சம்மதத்திற்காகக் காத்திருந்தனர்.

actor surya images

கடைசியில் அவர்கள் பச்சைக்கொடிக் காட்ட, அவர்கள் இருவரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, 2006 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்கள் இருவருக்கும் 2007ல் தியா என்ற மகளும், 2010ல் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.

Actor Surya Entry in Cini Field in Tamil

தமிழ் சினிமாவில் சரவணன் என்கிற பெயரில் ஏற்கனவே நடிகர்கள் இருந்ததால் இயக்குநர் மணிரத்தினம் சரவணனுக்கு தனக்கு பிடித்த ‘சூர்யா’ என்கிற பெயரை வைத்தார். தனது தந்தையின் நடிப்பை பார்த்து சினிமா மீது காதல் கொண்ட சூர்யா 1997ஆம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

actor surya images

நடிகரின் மகனாக இருந்தாலும் குழந்தை நட்சத்திரமாக எந்தப் படத்திலும் சூர்யா நடிக்கவில்லை. ‘ஆசை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அதனை ஏற்க மறுத்துவிட்டார். மணிரத்தினம் இயக்கிய இந்தி திரைப்படமான ‘குரு’ திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் அந்தப் படத்தின் நாயகன் அபிஷேக் பச்சனுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஃபிரண்ட்ஸ்’ திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். அவ்வெற்றியைத் தொடர்ந்து, அதே ஆண்டில் வெளியான ‘நந்தா’ படமும் வெற்றிபெற்று, தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றுத் தந்து, அவரை முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது.

actor surya images

2001 ஆம் ஆண்டில் பாலாவின் (இயக்குனர்) இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளியாக நடித்திருப்பார். இந்தப் படம் இவருக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

actor surya images

மேலும் இவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 2003 இல் கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க திரைப்படத்தில் நடித்தார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இந்த இரு திரைப்படங்களும் விமர்சன , வியாபார ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதன் மூலம் தமிழகத் திரைப்படத்துறை முன்னணி நாயகர்களில் ஒருவரானார்.

actor surya images

மேலும் 51 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பிதாமகன் திரைப்படத்தில் நடித்தற்காக பரிந்துரை செய்யப்பட்டது. பின் பேரழகன் திரைப்படத்தில் கல்லூரி மாணவராகவும், கூன் விழுந்த நபராகவும் இரு வேடங்களில் நடித்திருப்பார்.

actor surya images

இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான 52 வது பிலிம்பேர் விருது பெற்றார். 2004 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து (திரைப்படம்) நடித்தார். இவர் இதில் மாணவ தலைவர் வேடத்தில் நடித்திருந்தார்.

2005 ஆம் ஆண்டில் சூர்யா மாயாவி, கஜினி ,ஆறு ஆகிய மூன்று திரைப்படங்களில் நாயகனாக நடித்தார. கஜினியில் மறதிநோய் உள்ளவராக நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (கஜினி (2008 திரைப்படம்) அதே பெயரில் வெளியானது. மாயாவி, ஆறு ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது. 2006 இல் சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்), 2007 இல் வேல் (திரைப்படம்) போன்றவற்றில் நடித்தார். இதில் வேல் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

2008 இல் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்தார். இதில் தந்தை, மகன் ஆகிய இருவேடங்களில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

Actor Surya Telvision Hosted in Tamil

சின்னத்திரையில் ‘நீங்களும் வெல்லலாம் ஒருகோடி’ என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். ஜனவரி மாதம் 2012 ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் தொலைக்கட்சியில் தொடங்கப்பட்ட கேம் ஷோவான ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி, பிப்ரவரி 27 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில் தொடங்கிய அதில், ஜூலை மாதம் 12 ஆம் தேதி வரை, அவர் அதைத் தொகுத்து வழங்கினார்.

actor surya images

Actor Surya Social Activities in Tamil

படிக்க வசதியின்றி தவிக்கும் ஏழை மாணவர்களுக்காக ‘அகரம்’ என்கிற அறக்கட்டளை நிறுவி பல குழந்தைகளின் கல்விக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். மேலும், புலிகளைக் காக்கப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், காசநோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும் வழங்கி வருகிறார். லாப நோக்கமற்ற அவரது தொண்டு நிறுவனத்தால், இதுவரை நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகள் கல்விச் செல்வம் பெற்று, பயனடைந்து வருகின்றனர்.

actor surya images

கூட்டுக்குடும்ப வாழ்க்கையை விரும்பும் சூர்யா தன் குடும்பத்தினருடன் ‘லட்சுமி இல்லம்’ என்கிற தன் தாயின் பெயரில் கட்டப்பட்ட வீட்டிலேயே வசித்து வருகிறார்.

Actor Surya Film List in Tamil

ஆண்டு திரைப்படம்
1997 நேருக்கு நேர்
1998 காதலே நிம்மதி
1998 சந்திப்போமா
1999 பெரியண்ணா
1999 பூவெல்லாம் கேட்டுப்பார்
2000 உயிரிலே கலந்தது
2001 பிரண்ட்ஸ்
2001 நந்தா
2002 உன்னை நினைத்து
2002 ஸ்ரீ
2002 மௌனம் பேசியதே
2003 காக்க காக்க
2003 பிதாமகன்
2004 பேரழகன்
2004 ஆய்த எழுத்து
2005 மாயாவி
2005 கஜினி
2005 ஆறு
2006 ஜூன் ஆர்
2006 சில்லுனு ஒரு காதல்
2007 வேல்
2008 குசேலன்
2008 வாரணம் ஆயிரம்
2009 அயன்
2009 ஆதவன்
2010 சிங்கம்
2010 ரத்த சரித்திரம் 2
2010 மன்மத அன்பு
2011 கோ
2011 அவன் இவன்
2011 7 ஆம் அறிவு
2012 மாற்றான்
2013 சென்னையில் ஒரு நாள்
2013 சிங்கம் 2
2014 நினைத்தது யாரோ
2014 அஞ்சான்
2015 மாசு என்கிற மாசிலாமணி
2015 பசங்க 2
2016 24
2017 சிங்கம்3
2018 தானா சேர்ந்த கூட்டம்
2018 கடைக்குட்டி சிங்கம்
2019 என். ஜி. கே
2019 காப்பான்
2020 சூரரைப் போற்று
2021 ஜெய் பீம்
2022 எதற்கும் துணிந்தவன்

Actor Surya Awards and Recognition

இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.

  • 2003 – சிறந்த நடிகருக்கான ‘ஐடிஎஃப்ஏ (ITFA) விருதை’, ‘காக்க காக்க’ திரைப்படத்திற்காகப் பெற்றார்.
  • 2003 – சிறந்த துணை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘பிதாமகன்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • 2004 – சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘பேரழகன்’ திரைப்படத்திற்காக வென்றார்.
  • 2008 – ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘விஜய் விருது’, மற்றும் ‘ஆண்டின் ஸ்டைலிஷ் யூத் ஐகான்’ என்று சொல்லி, ‘சவுத் ஸ்கோப் விருது’ வழங்கப்பட்டது.
  • 2009 – ‘என்டர்டைனர் ஆஃப் தி இயர்’ என்று அறிவித்து, ‘விஜய் விருதுகளை’, ‘அயன்’ மற்றும் ‘ஆதவன்’ திரைப்படங்களுக்காகப் பெற்றார்.
  • 2010 – ‘சிங்கம்’ படத்திற்காக ‘பிக் FM’ மற்றும் ‘விஜய் விருது’ அவரை ‘என்டர்டைனர் ஆஃப் தி இயர்’ என்று அறிவித்து, விருதுகளை வழங்கியது.
  • 2012 – சிறந்த நடிகருக்கான ‘சினிமா விருதை’, ‘மாற்றான்’ திரைப்படத்திற்காக வென்றார்.

Actor Surya Social Media Link

Reference: Wikipedia