நடிகர் அஜித் குமாரின் வாழ்க்கை வரலாறு
Name | Ajith Kumar |
Born Name | Ajith Kumar |
Age | 50 – (May 1, 1971) |
Occupation | Actor, Racer, Professor |
Parents Name | P. Subramanian (Father)
S. Mohini (Mother) |
Spouse Name | Shalini |
Children | Anoushka (Daughter) Aadvik (Son) |
எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், அஜித் குமார் அவர்கள் தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், தென்னிந்தியா திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் “தல”, “அல்டிமேட் ஸ்டார்”, “காதல் மன்னன்” என்ற புனை பெயர்களால் ரசிகர்கள் கொண்டாடப்படுகிறார். சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், உலகளவில் பிரபலமான ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் ஒரு பொறியாளராக புகழ் பெற்றுள்ளார், மற்றும் 2018ம் ஆண்டு தமிழக மாநில அளவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ் பெற்றுள்ளார்.
Actor Ajith Kumar Childhood Days in Tamil
அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.
அஜீத் குமார் அவர்கள், சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், படிப்பின் மீது சற்று ஆர்வம் குறைந்தே காணப்பட்டார். இதனால், 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார்.
Actor Ajith Kumar Early Life in Tamil
தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர், ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், பல போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.
பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். இதனால், அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது.
Actor Ajith Kumar Marriage Life in Tamil
நடிகர் அஜீத் குமார் அவர்கள், 1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடித்த நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
அவர்களது திருமணத்திற்குப் பின்னர், தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. அவர்களுக்கு, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.
Actor Ajith Kumar Entry in Cini Field in Tamil
அஜித் குமார், தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. பின்னர் தான் “அமராவதி” என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.
அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் “ஆசை” திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் இயக்குனர் சரணின் “காதல் மன்னன்” எனும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் “காதல் மன்னன்” என்ற பெயரினை புனை பெயராக பெற்றுள்ளார்.
அஜித்குமார் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும்ப்லோ ப்ளாக் பஸ்டர் படமாக வெற்றி பெற்ற “தீணா” திரைப்படத்தில் இவர் ஏற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. பின்னர் திரைப்பட ரசிகர்கள் இவரை “தல” என்ற பெயரினை கொண்டு அழைத்து வருகின்றனர்.
2003 முதல் 2005 வரை, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். அந்த கால கட்டத்தில் அட்டகாசம் திரைப்படம் தவிர வெளிவந்தப்படங்கள் அனைத்துமே தோவில்யில் முடிந்தது. அந்த கால கட்டத்தில் சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்தார்.
அதன் பிறகு பல தோல்வி அடைந்த அஜித் குமாருக்கு வெங்கட் பிரபுவின் மங்காத்தா திரைப்படம் ஒரு மாபெறும் வெற்றி படமாக மாறியது. அதன் பிறகு வணிக ரீதியாக சில வெற்றி படங்களை நடிகர் அஜித் அவர்கள் தந்து வருகின்றார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்ற படமான ஹச் வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள வலிமை படம்.
Actor Ajith Kumar Racing Career in Tamil
தனது இளமைப் பருவத்திலிருந்தே ஆர்வமுடன் பல ரேஸ் கார், பைக் பந்தையங்களில் கலந்து வெற்றிகண்டுள்ளார். அவர், மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார்.
ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Ajith Kumar Film List in Tamil
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் |
1990 | என் வீடு என் கணவர் | செண்பகராமன் |
1993 | பிரேம புத்தகம் | கோலபுடி மாருதி ராவ் |
1993 | அமராவதி | செல்வா |
1994 | பாசமலர்கள் | சுரேஷ் சந்திர மேனன் |
1994 | பவித்ரா | கே. சுபாஷ் |
1995 | ராஜாவின் பார்வையிலே | ஜானகி சௌந்தர் |
1995 | ஆசை | வசந்த் |
1996 | வான்மதி | அகத்தியன் |
1996 | கல்லூரி வாசல் | பவித்ரன் |
1996 | மைனர் மாப்பிள்ளை | வி. சி. குகநாதன் |
1996 | காதல் கோட்டை | அகத்தியன் |
1997 | நேசம் | கே. சுபாஷ் |
1997 | ராசி | முரளி அப்பாஸ் |
1997 | உல்லாசம் | ஜே. டி. ஜெரி |
1997 | பகைவன் | ரமேஷ் பாலகிருஷ்ணன் |
1997 | ரெட்டை ஜடை வயசு | சி. சிவகுமார் |
1998 | காதல் மன்னன் | சரண் |
1998 | அவள் வருவாளா | ராஜ் கபூர் |
1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | விக்ரமன் |
1998 | உயிரோடு உயிராக | சுஷ்மா அகுசா |
1999 | தொடரும் | ரமேஷ் கண்ணா |
1999 | உன்னை தேடி | சுந்தர் சி. |
1999 | வாலி | எஸ். ஜே. சூர்யா |
1999 | ஆனந்த பூங்காற்றே | ராஜ் கபூர் |
1999 | அமர்க்களம் | சரண் |
1999 | நீ வருவாய் என | இராசகுமாரன் |
2000 | முகவரி | வி. இசட். துரை |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | ராஜீவ் மேனன் |
2000 | உன்னை கொடு என்னை தருவேன் | கவி காளிதாஸ் |
2001 | தீனா | ஏ. ஆர். முருகதாஸ் |
2001 | சிட்டிசன் | சரவண சுப்பையா |
2001 | பூவெல்லாம் உன் வாசம் | எழில் |
2001 | அசோகா | சந்தோஷ் சிவன் |
2002 | ரெட் | ராம் சத்யா என்ற பெயரில் சிங்கம்புலி இயக்கியது |
2002 | ராஜா | எழில் |
2002 | வில்லன் | கே. எஸ். ரவிக்குமார் |
2003 | என்னை தாலாட்ட வருவாளா | கே. எஸ். ரவீந்திரன் |
2003 | ஆஞ்சநேயா | N. மகாராஜன் |
2004 | ஜனா | சாஜி கைலாஷ் |
2004 | அட்டகாசம் | சரண் |
2005 | ஜி | என். லிங்குசாமி |
2006 | பரமசிவன் | பி. வாசு |
2006 | திருப்பதி | பேரரசு |
2006 | வரலாறு | கே. எஸ். ரவிக்குமார் |
2007 | ஆழ்வார் | செல்லா |
2007 | கிரீடம் | ஏ. எல். விஜய் |
2007 | பில்லா | விஷ்ணுவர்த்தன் |
2008 | ஏகன் | ராஜூ சுந்தரம் |
2010 | அசல் | சரண் |
2011 | மங்காத்தா | வெங்கட் பிரபு |
2012 | பில்லா 2 | சக்ரி டோலட்டி |
2012 | இங்கிலீஷ் விங்கிலிஷ் | கௌரி சின்டே |
2013 | ஆரம்பம் | விஷ்ணுவர்த்தன் |
2014 | வீரம் | சிவா |
2015 | என்னை அறிந்தால் | கௌதம் மேனன் |
2015 | வேதாளம் | சிவா |
2017 | விவேகம் | சிவா |
2018 | விசுவாசம் | சிவா |
2019 | நேர்கொண்ட பார்வை | வினோத் |
2020 | வலிமை | வினோத் |
Actor Ajith Kumar Awards and Recognition
- அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புத்தகம்) பரத்முனி ஆர்ட் அகாதமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
- 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
- 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
- 2001 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
- 2002ஆம் ஆண்டு வில்லன் படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
- 2006 – தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.
- விஜய் விருதுகளை 2௦௦6ல் ‘வரலாறு’, 2011ல் மங்காத்தா படத்திற்காக இரண்டு முறையும் பெற்றார்.
- சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’, 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2௦௦1ல் ‘சிட்டிசன்’ படத்திற்காகவும் வென்றார்.
- சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சென்னை டைம்ஸ் விருதை’, ‘மங்காத்தா’ படத்திற்காக 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.
- ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2002ல் ‘வில்லன்’ படத்திற்காகவும், 2006ல் ‘வரலாறு’ படத்திற்காகவும், 2௦௦7ல் ‘பில்லா’ படத்திற்காகவும் அவருக்கு வழங்கப்பட்டது.
- 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் விருதுகளின் சிறந்த எதிர்நாயகன் மற்றும் விருப்பமான நாயகன் என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.
Actor Ajith Kumar Social Media Link
Note: Above Link are Fan Pages.
Reference: Wikipedia