actor vivek images

நடிகர் விவேக்கின் வாழ்க்கை வரலாறு

Name

Vivek

Born Name Vivekanandan
Born 59 (November 19, 1961)
Died April 17, 2021
Occupation Actor, Comedian, Television Personality, Playback Singer, Social Activist
Parents Name Angayya (Father)

Maniyammal (Mother)

Spouse Name Arulselvi Vivek
Children Amritha Nandini (Daughter)

Tejaswini (Daughter)

Prasanna Kumar (Son)

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்.

இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

actor vivek images

நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.

‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

Actor Vivek Childhood Days in Tamil

இவர் 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன் மற்றும் மணியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது கடைசிப் பிள்ளையாகத் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தார். விஜயலட்சுமி, சாந்தி ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள். வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ராஜு. இவரது சொந்த ஊர் கோயில்பட்டி – இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.

actor vivek images

Actor Vivek Early Life in Tamil

ஊட்டி கான்வென்ட்டில், பள்ளிப் படிப்பையும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டமும் பெற்றார். சிறு வயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். தமக்கையுடன் சேர்ந்து பல மேடைகளில் நாட்டியம் ஆடியுள்ளார். ஆர்மோனியம், வயலின், தபேலா போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க வல்லவர். மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது, மதுரையில் நடைபெற்ற பரத நாட்டியப் போட்டி ஒன்றில் பங்காற்றினார். சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது.

actor vivek images

Actor Vivek Marriage Life in Tamil

நடிகர் விவேக் அருட்செல்வி என்பவரைத் திருமணம் முடித்து அமிர்தா நந்தினி, தேஜசுவினி என்ற இரு மகள்களும், பிரசன்னா குமார் என்ற ஒரு மகனும் இருந்தனர், இவரது மகன் 2015 ஆம்  ஆண்டு டெங்கு காய்ச்சலாலல் காலமானார்.

actor vivek images

Actor Vivek Entry in Cini Field in Tamil

கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைக்கவே அவர் இவரது நடனத்தையும், மிமிக்ரியையும் பார்த்த பாலச்சந்தர் தனது மனதில் உறுதி வேண்டும் (1987) படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கொடுத்தார். அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

1990 – களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு.

actor vivek images

புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.

Actor Vivek Film List in Tamil

ஆண்டு திரைப்படம்
1987 மனதில் உறுதி வேண்டும்
1989 புதுப்புது அர்த்தங்கள்
1990 புது மாப்பிள்ளை
1990 கேளடி கண்மணி
1991 இதய வாசல்
1993 உழைப்பாளி
1994 வீரா (1994)
1994 புதிய மன்னர்கள்
1994 வனஜா கிரிஜா
1994 பொங்கலோ பொங்கல்
1994 எங்க முதலாளி
1995 நந்தவனத் தெரு
1995 மாயாபஜார் 1995
1995 பெரிய இடத்து மாப்பிள்ளை
1996 காலமெல்லாம் காதல் வாழ்க
1996 எனக்வொரு மகன் பிறப்பான்
1997 நேருக்கு நேர்
1997 சிஷ்யா
1997 பெரிய இடத்து மாப்பிள்ளை
1998 காதல் மன்னன்
1998 மறுமலர்ச்சி
1998 காதலே நிம்மதி
1998 உன்னுடன்
1998 சொல்லாமல்
1998 கண்ணெதிரே தோன்றினாள்
1998 அரிச்சந்திரா
1998 நாம் இருவர் நமக்கு இருவர்
1999 நினைவிருக்கும் வரை
1999 பூமகள் ஊர்வலம்
1999 வாலி
1999 விரலுக்கேத்த வீக்கம்
1999 உனக்காக எல்லாம் உனக்காக
1999 திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
1999 உன்னருகே நானிருந்தால்
1999 ஆசையில் ஒரு கடிதம்
2000 திருநெல்வேலி
2000 ஏழையின் சிரிப்பில்
2000 சுதந்திரம்
2000 தை பொறந்தாச்சு
2000 முகவரி
2000 அலைபாயுதே
2000 கந்தா கடம்பா கதிர்வேலா
2000 குஷி
2000 கரிசக்காட்டு பூவே
2000 பெண்ணின் மனதை தொட்டு
2000 உன்னைக் கண் தேடுதே
2000 பட்ஜெட் பத்மநாபன்
2000 பாளையத்து அம்மன்
2000 பிரியமானவளே
2000 சீனு
2001 மின்னலே
2001 உள்ளம் கொள்ளை போகுதே
2001 டும் டும் டும்
2001 பத்ரி
2001 மிடில் கிளாஸ் மாதவன்
2001 லவ்லி
2001 தில்
2001 விஸ்வநாதன் ராமமூர்த்தி
2001 பூவெல்லாம் உன் வாசம்
2001 அள்ளித்தந்த வானம்
2001 12 பி
2001 ஷாஜகான்
2001 மனதை திருடிவிட்டாய்
2001 பார்த்தாலே பரவசம்
2001 மஜ்னு
2002 அழகி
2002 ரோஜாக்கூட்டம்
2002 தமிழன்
2002 தென்காசிப்பட்டிணம்
2002 ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
2002 யூத்
2002 ரன்
2003 சாமி
2003 பார்த்திபன் கனவு
2003 லேசா லேசா
2003 விசில்
2003 தூள்
2003 பாய்ஸ்
2003 அலை
2003 திருமலை
2003 எனக்கு 20 உனக்கு 18
2004 உதயா
2004 எதிரி
2004 பேரழகன்
2004 செல்லமே
2004 எம். குமரன் தா/பெ மகாலஷ்மி
2005 அந்நியன்
2006 சரவணா
2006 ஆதி
2006 பரமசிவன்
2006 திருட்டு பயலே
2007 சிவாஜி
2007 கிரீடம்
2008 சண்டை
2008 குருவி
2008 பொம்மலாட்டம்
2009 படிக்காதவன்
2010 சிங்கம்
2011 மாப்பிள்ளை
2014 வேலையில்லா பட்டதாரி
2015 என்னை அறிந்தால்
2016 Thozha
2016 Manithan
2017 Meesaya Murukku
2017 Velaiilla Pattadhari 2
2017 Sakka Podu Podu Raja
2019 Viswasam
2019 Vellai Pookal
2019 Bigil
2020 Dharala Prabhu
2021 Aranmanai 3

actor vivek images

Actor Vivek Social Activities in Tamil

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு சமூக செயல்பாடுகளில் விவேக் ஈடுபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக மரம் நடுவதன் அவசியத்தை முன்னெடுத்து வந்த விவேக் 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்கு வைத்து இதுவரையில் 33,23,000 மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். தமிழக அரசின் பிளாஸ்டிக் இல்லா தமிழகம், கொரானா விழிப்புணர்வு விளம்பரங்களிலும் விவேக் நடித்திருந்தார்.

actor vivek images

Actor Vivek Death in Tamil

16.04.2021 அன்று மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், தனது 59வது வயதில் 17.04.2021 அன்று அதிகாலை 4.35 மணிக்கு காலமானார்.

actor vivek images

Actor Vivek Awards and Recognition

  • இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
  • அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.
  • 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’.
  • ‘உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றார்.
  • சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான ‘எடிசன் விருது’.
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’.
  • சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஐ.டி.எஃப்.ஏ விருது.

actor vivek images

Actor Vivek  Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia