நடிகர் கமல்ஹாசன் வாழ்க்கை வரலாறு
Name | Kamal Haasan |
Born Name | Parthasarathy Srinivasan |
Born | 67 (November 7, 1954) |
Occupation | Actor, Filmmaker, Playback Singer, Television Presenter, Dancer, Entrepreneur, Politician |
Parents Name | D. Srinivasan (Father)
Rajalakshmi Srinivasan (Mother) |
Spouse Name | Vani Ganapathy (1978 to 1988 Divorce),
Sarika Thakur (1988 to 2004 Divorce), Domestic partner Gautami Tadimalla (2004 to 2016) |
Children | Shruti Haasan (Daughter)
Akshara Haasan (Daughter) |
கமல்ஹாசன் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவராவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்ற கமல்ஹாசன் அவர்களைப் பற்றியறிய மேலும் தொடர்ந்துப் படிக்கவும்.
நடிகர், நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை–திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன்.
இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூசண், பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 2019 இல் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.
கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
Actor Kamal Haasan Childhood Days in Tamil
கமல்ஹாசன் இராமநாதபுரம், பரமக்குடியில் சிறீவைணவ ஐயங்கார் தமிழ்ப் பிராமணர் குடும்பத்தில் 07 நவம்பர் 07, 1954 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை டி. சீனிவாசன் ஒரு வழக்கறிஞர். தாயார் ராஜலட்சுமி. கமல் குடும்பத்தில் இளையவர். இவரது தமையன்மார்கள் சாருஹாசன், சந்திரஹாசன் இருவரும் வழக்கறிஞர்கள். சாருகாசன் 1980களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி ஒரு பரதநாட்டியக் கலைஞர்.
Actor Kamal Haasan Early Life in Tamil
பரமக்குடியில் ஆரம்பக் கல்வி கற்றார். சகோதரர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு இவர்கள் சென்னைக்கு குடும்பத்துடன் குடியேறினர். கமல்ஹாசன் சென்னை சாந்தோமில் கல்வி கற்றார். தந்தையின் விருப்பப்படி, கமல்ஹாசன் திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டார். தாயாரின் மருத்துவர் ஒருவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரிடம் சென்ற போது கமலையும் தன்னுடன் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினார். ஏ. வி. மெய்யப்பனின் மகன் எம். சரவணனின் சிபாரிசில் ஏவிஎம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
Actor Kamal Haasan Marriage Life in Tamil
1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர். பின்னர், சிம்ரனுடனான தொடர்பின் காரணமாக, சரிகா அவர்கள், கமலிடம் விவாஹரத்துக் கோரினார். 2002-ல் சரிகாவுடனான உறவிலிருந்து விடுதலைப் பெற்ற பின், 2005-லிருந்து கௌதமியுடன் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருந்த அவர் 2016 ஆம் ஆண்டு விடுதலை பெற்றார்.
Actor Kamal Haasan Entry in Cini Field in Tamil
தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள், தீவிர நாடகக் கலைஞராகவும் இருந்து வருகிறார். 1960ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஆறு. அத்திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார்.
குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், ஒரு இளைஞனாக, 1970ல் வெளியான ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 1973ல், வெளியான கே.பாலச்சந்தர் அவர்களின் ‘அரங்கேற்றம்’ என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது.
துணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.
தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருதும்’, ‘தேசிய விருதும்’ கிடைத்தது. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர்.
’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வருமையின் நிறம் சிகப்பு’, ‘நீயா’, ‘கல்யாண ராமன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராஜப்பார்வை’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் இவருக்குப் பல விருதுகளைத் தேடித்தந்தது.
அதே சமயத்தில், அவர் ஹிந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’, ‘ராஜ் திலக்’, கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில. 1990களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன.
1990ல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது. அன்று முதல், இவர் ‘பத்மஸ்ரீ கமல்ஹாசன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார். திறமைசாளியான கமல்ஹாசன் அவர்கள், பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.
Actor Kamal Haasan Film List in Tamil
திரைப்படம் |
ஆண்டு |
களத்தூர் கண்ணம்மா |
1960 |
அரங்கேற்றம் | 1973 |
அபூர்வ ராகங்கள் | 1975 |
மன்மத லீலை | 1976 |
16 வயதினிலே | 1977 |
சிகப்பு ரோஜாக்கள் | 1978 |
நினைத்தாலே இனிக்கும் | 1979 |
கல்யாணராமன் | 1979 |
குரு | 1980 |
ராஜ பார்வை | 1981 |
மூன்றாம் பிறை | 1982 |
சகலகலா வல்லவன் | 1982 |
சலங்கை ஒலி | 1983 |
தூங்காதே தம்பி தூங்காதே | 1983 |
புன்னகை மன்னன் | 1986 |
பேசும் படம் | 1987 |
நாயகன் | 1987 |
உன்னால் முடியும் தம்பி | 1988 |
அபூர்வ சகோதரர்கள் | 1989 |
மைக்கேல் மதன காமராஜன் | 1990 |
குணா | 1991 |
மகாநதி | 1994 |
தேவர் மகன் | 1992 |
குருதிப்புனல் | 1995 |
இந்தியன் | 1996 |
அவ்வை சண்முகி | 1996 |
ஹேராம் | 2000 |
ஆளவந்தான் | 2001 |
தெனாலி | 2001 |
பஞ்சதந்திரம் | 2002 |
அன்பே சிவம் | 2003 |
விருமாண்டி | 2004 |
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | 2004 |
வேட்டையாடு விளையாடு | 2006 |
தசாவதாரம் | 2008 |
உன்னைப்போல் ஒருவன் | 2009 |
விஸ்வரூபம் | 2012 |
உத்தம வில்லன் | 2015 |
பாபநாசம் | 2015 |
விஸ்வரூபம் II | 2018 |
இந்தியன் 2 | 2022 |
விக்ரம் | 2022 |
Actor Kamal Haasan Social Activities in Tamil
‘கமல் நற்பணி இலக்கியம்’ என்ற அமைப்பின் கீழ் பல சமுதாயப் பொது நல அமைப்புகள் அமைத்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள், அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுவது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினிப் போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள்.
ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் பொருட்டாக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதித் திரட்டி, சென்னை போரூரிலிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 2010ஆம் ஆண்டு வழங்கினார்.
Actor Kamal Haasan Politics in Tamil
கமல், தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார். அதன்படி, பிப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். அதே கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளிட்டு அதனை ஏற்றி வைத்தார்.
டிசம்பர் 2020 அன்று, 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான மநீமயின் தேர்தல் பிரச்சாரத்தை கமல் தொடங்கினார், 142 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார் மற்றும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார்.மநீம தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.
Actor Kamal Haasan Awards and Recognition
- கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருது வாங்கியுள்ளார்.
- 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார்.
- இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.
- இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூசண், பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது.
- 1990 இல் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.
- 2014 இல் பத்ம பூசண் விருதும் வழங்கியது.
- 2016 இல் செவாலியே விருது பெற்றார்.
- சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
- 2019 இல் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.
Actor Kamal Haasan Social Media Link
Reference: Wikipedia