actor sathyaraj images

நடிகர் சத்யராஜின் வாழ்க்கை வரலாறு

Name Sathyaraj
Born Name Rangaraj Subbiah
Age 67 (October 3, 1954)
Occupation Flim Actor, Flim Director, Political Activist
Parents Name Subbaiah (Father)

Nathambal Subbaiah (Mother)

Spouse Name Maheshwari
Children Sibiraj (Son)

Divya (Daughter)

சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையன் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர்.

actor sathyaraj images

இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார். சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் கல்லூரி நண்பர் என்பதால் ஒரு நெருங்கிய நட்பு பகிர்வு மற்றும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களில் அடிக்கடி சேர்ந்து நடித்தனர். மணிவண்ணன் மற்றும் சத்யராஜ் ஒன்றாக 1987 ல் இருந்து 1994 வரை தொடங்கி தொடர்ச்சியாக 12 வெற்றி படங்களில் சேர்ந்து நடித்தனர்.

வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.

‘என் கேரக்டரே புரிஞ்சிக்க மட்டிங்கறியே’, ‘என்ன மா…. கண்ணு’, ‘தகடு தகடு’ என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார். கொங்குத் தமிழ் பேசி, தனக்கென உரித்தான தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தவர். ஹீரோ, எதிர்மறைக் கதாபாத்திரம், காமெடி என அனைத்து வகையான கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு ‘பெரியார்’ திரைப்படமும், ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படமும் வரலாற்று சாதனைப் படைத்தப் படங்களாக மாறி, அவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தது.

actor sathyaraj images

அவர் நாயகனாக நடித்த காலக்கட்டங்களில், அனைத்து முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்தும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தும் புகழ்பெற்றார்.

Actor Sathyaraj Childhood Days in Tamil

நடிகர் சத்யராஜ் அவர்கள், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும்  கோயம்பத்தூரில்  அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் சுப்பையா மற்றும் நாதாம்பாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர், ரெங்கராஜ். மேலும், அவருக்கு இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர்.

actor sathyaraj images

Actor Sathyaraj Early Life in Tamil

சத்யராஜ் ஆரம்பகாலப் பள்ளிப்படிப்பை கோயம்புத்தூரில் உள்ள செயின்ட் மேரிஸ் கான்வெண்ட்டில் தொடங்கினார். தனது பத்தாம் வகுப்பு வரை, கோவையில் உள்ள ராம்நகர் உயர்நிலைப்பள்ளியில் படித்த அவர், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வரலாறு மற்றும் பூகோளப் பாடங்களில் முதல் மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிப் பெற்றார்.

தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இளநிலைக் கல்விப் பெறுவதற்காக கோயம்புத்தூர் அரசு கலை கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர், தாவரவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் அவர்கள், பி.யூ.சி படிக்கும் போது, அவரது சக மாணவனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் அவர்கள் இருவரது நட்பு, அங்கு தான் தொடங்கியது.

actor sathyaraj images

Actor Sathyaraj Marriage Life in Tamil

சத்யராஜ் அவர்கள், மகேஸ்வரி என்பவரைத் 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இருவருக்கும் சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் பிறந்தனர். சிபிராஜ் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

actor sathyaraj images

Actor Sathyaraj Entry in Cini Field in Tamil

நடிகர் சத்யராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து, தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர். தயாரிப்பு நிர்வாகியாக செயல்பட்டுக் கொண்டிருந்த சத்யராஜ் அவர்களுக்கு, பிரபல இயக்குனரான டி. என். பாலு அவர்கள், அவரது படமான ‘சட்டம் என் கையில்’ என்ற படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். மக்களிடையே, அவரது நடிப்பு வெகுவாக மக்களை கவர்ந்தது.

ஒரு வில்லனாகத் திரையுலகில் அறிமுகமாகி ‘மூன்று முகம்’ (1982), ‘பாயும் புலி’ (1983), ‘நூறாவது நாள்’ (1984), ‘எனக்குள் ஒருவன்’ (1984), ‘நான் மகான் அல்ல’ (1984), ‘நான் சிகப்பு மனிதன்’ (1985), ‘முதல் மரியாதை’ (1985), ‘பகல் நிலவு’ (1985), ‘காக்கிச்சட்டை’ (1985), ‘பிள்ளை நிலா’ (1985), ‘விக்ரம்’ (1986), ‘தர்மம்’ (1986), ‘இரவு பூக்கள்’ (1986), ‘மிஸ்டர் பாரத்’ (1986), போன்ற திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அவர் ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தின் மூலமாக சிறந்த நடிகராக மாறி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார்.

actor sathyaraj images

Actor Sathyaraj Flim List in Tamil

ஆண்டு திரைப்படம்
1990 நடிகன்
1991 பிரம்மா
1991 திருமதி பழனிச்சாமி
1992 தெற்கு தெரு மச்சான்
1992 பங்காளி
1992 ரிக்சா மாமா
1993 உடன் பிறப்பு
1994 வால்டர் வெற்றிவேல்
1994 அமைதிப்படை
1994 வண்டிச்சோலை சின்ராசு
1995 வில்லாதி வில்லன்
1996 மாமன் மகள்
1999 மலபார் போலீஸ்
2004 மகா நடிகன்
2005 இங்கிலீஷ்காரன்
2007 பெரியார்
2007 ஒன்பது ரூபாய் நோட்டு
2011 நண்பன்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம்
2013 ராஜா ராணி
2014 சிகரம் தொடு
2015 பாகுபலி
2017 பாகுபலி 2

actor sathyaraj images

Actor Sathyaraj Social Activities in Tamil

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். இதில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

actor sathyaraj images

Actor Sathyaraj Awards and Recognition

  • தமிழக அரசின் உயரிய விருதான ‘கலைமாமணி விருதை’ வென்றார்.
  • 1987 – ‘வேதம் புதிது’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது’ பெற்றார்.
  • 1991 – தமிழ்நாடு அரசு அவருக்கு ‘எம்.ஜி. ஆர் விருது’ வழங்கி கௌரவித்தது.
  • 2007 – ‘பெரியார் விருது’ அவரது ‘பெரியார்’ படத்திற்காக வழங்கப்பட்டது.
  • 2007 – சத்தியபாமா பல்கலைக்கழகம் அவருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
  • 2007 – ‘ஒன்பது ருபாய் நோட்டு’ திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதினைப்’ பெற்றுத்தந்தது.
  • 2012 – ‘நண்பன்’ படத்தின் சிறந்த துணைக் கதாபாத்திரத்திற்கான ‘விஜய் விருதை’ வென்றார்.

Actor Sathyaraj Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia