actor sivakarthikeyan images

நடிகர் சிவகார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு

Name Sivakarthikeyan
Born Name Sivakarthikeyan
Age 36 (17 February, 1985)
Occupation Actor, Producer, Playback Singer, Lyricist
Parents Name G. Doss (Father)

Raji Doss (Mother)

Spouse Name Aarthi
Children Aaradhana (Daughter)

Gugan Doss (Son)

இப்போது உள்ள குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஹீரோக்களின் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்துள்ளார். சிவகார்த்திகேயன் முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர், தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர்.

actor sivakarthikeyan images

விஜய் டிவி தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.

Actor Sivakarthikeyan Early Life in Tamil

இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் கல்லூரி காலத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களில் நடித்து அதன் மூலமாக பிரபலமாகியுள்ளார். பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவை பேச்சாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.

actor sivakarthikeyan images

பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.

actor sivakarthikeyan images

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  ‘அது இது எது’ நிகழ்ச்சி அவரை புகழின் உச்சிக்கே கொண்டுசென்றது. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிதும் பேசப்பட்ட நிகழ்ச்சிகளான ‘ஜோடி சீசன் 5’ மற்றும்  ‘சூப்பர் சிங்கர்’ போன்ற தமிழ் ரியாலிட்டி நிகச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி புகழடைந்தார். இதன்மூலமாகத்தான் அவர் திரையுலகில் கால்பதிக்க வாய்ப்பு கிடைத்தது.

actor sivakarthikeyan images

‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வந்துள்ள இவர், இயக்குனர் அட்லீயின் ‘முகப்புத்தகம்’ என்ற குறும்படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். பின்னர் நடிகர் அஜித் நடித்த ‘ஏகன்’ திரைப்படத்தில் ஒரு குறிப்பிடப்படாத நடிகராக நடித்துள்ளார் மற்றும் தமிழ் திரைத்துறையில் சில விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

actor sivakarthikeyan images

Actor Sivakarthikeyan Marriage Life in Tamil

நடிகர் சிவகார்த்திகேயன் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  27ஆம் நாள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 2013 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை (ஆராதனா) மற்றும் 2021 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை (குகன் தாஸ்) பிறந்தது.

actor sivakarthikeyan images

Actor Sivakarthikeyan Entry in Cini Field in Tamil

2012-ம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தில் நாயகனாக நடிக்க இயக்குனர் பாண்டிராஜ் அழைப்பினை தொடர்ந்து அப்படத்தில் நாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நடிகனாக அறிமுகமானவர். பின்னர் அதே ஆண்டு தனுஷின் ‘3’ படத்திலும் ‘மனம் கொத்தி பறவை’ படத்திலும் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை கவர்ந்தவர்.

இவர் 3 படத்தில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், பின்னர் மனம் கொத்தி பறவை படத்தில் ஒரு நாயகனாக நடித்து புகழ் பெற்றார். இவர் இப்படத்தில் ஒரு நகைச்சுவையாளராகவும், நாயகனாகவும் நடித்து தனது நடிப்பை நிலையேற்றியுள்ளார்.

actor sivakarthikeyan images

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களின் ஆதரவில் வெற்றி பெற்று, இவர் தமிழ் திரைத்துறையில் ஒரு குறிப்பிடப்படும் நடிகராக சித்தரிக்கப்பட்டார். பின்னர் இவர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தினை தொடர்ந்து இவர் தமிழ் திரையில் ஒரு முக்கிய நடிகராக பல விருதுகளை பெற்று பிரபலமானார்.

இவர் நடிப்பில் வெளியான காக்கி  சட்டை, மான் கராத்தே, ரஜினி முருகன் திரைப்படங்கள் மக்களின் ஆதரவில் வெற்றி பெற்ற நிலையில், 2016ம் ஆண்டு ‘ரெமோ’ திரைப்படத்தில் ஒரு பெண் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.

actor sivakarthikeyan images

Actor Sivakarthikeyan Playback Singer in Tamil

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பணியாற்றி மக்களின் ஆதரவை பெற்ற இவர், 2013ம் ஆண்டு இவரது நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் உள்ள அறிமுக பாடலை பாடி ஒரு பின்னணி பாடகராக பணியாற்ற தொடங்கியுள்ளார்.

பின்னர் மான் கராத்தே படத்தின் “ராயபுரம் பீட்டர்”, காக்கி சட்டை படத்தில் “ஐம் சோ கூல்” பாடலை பாடி புகழ் பெற்றார். பின்னர் 2018ம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தில் “கல்யாண வயசு” பாடலுக்கு பாடலாசிரியராக பணியாற்றி புகழ் பெற்றார். இப்பாடல் அந்த ஆண்டின் ரசிகர்களுக்கு பிடித்த பாடல் என பல விருதுகளை பெற்று பிரபலமானது.

actor sivakarthikeyan images

2019-ம் ஆண்டு கனா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் அந்த படத்தினை தனது “எஸ் கே ப்ரோடுச்டின்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்து தயாரிப்பாளராக தமிழ் திரைதிரையில் பணியாற்றி பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களை தயாரித்தும், நடித்தும் தமிழ் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

Actor Sivakarthikeyan Film List in Tamil

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2012 மெரினா செந்தில் நாதன்
2012 3 குமரன்
2012 மனம் கொத்திப் பறவை கண்ணன்
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா பட்டை முருகன்
2013 எதிர்நீச்சல் குஞ்சிதபாதம் என்னும் ஹரீஷ்
2013 வருத்தபடாத வாலிபர் சங்கம் போஸ் பாண்டி
2014 மான் கராத்தே பீட்டர்
2015 காக்கி சட்டை மதிமாறன்
2016 ரஜினி முருகன் ரஜினி முருகன்
2016 ரெமோ SK (சிவகார்த்திகேயன்) & ரெமோ (ரெஜினா மோத்வானி)
2017 வேலைக்காரன் அறிவு
2018 சீமராஜா சீமராஜா, கடம்பவேல் ராஜா
2019 மிஸ்டர். லோக்கல் மனோகர்
2019 ஹிரோ சக்தி
2019 நம்ம வீட்டு பிள்ளை அரும்பொன்
2021 டாக்டர் டாக்டர் வருண்
2022 அயலன் ஆயுஷ் நாராயணன்
2022 டூன் பஞ்ச் சொக்கலிங்கம்

actor sivakarthikeyan images

List of Songs Sung by Sivakarthikeyan in Tamil Movies

ஆண்டு திரைப்படம் பாடல்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்
2014 மான் கராத்தே ராயபுரம் பீட்டர்
2014 காக்கி சட்டை ஐயம் சோ கூல்
2015 ரஜினி முருகன் ரஜினி முருகன்
2015 மாப்ள சிங்கம் எதுக்கு மச்சான்
2018 கனா வாயாடி பெத்த புள்ள

actor sivakarthikeyan images

List of Films Produced by Sivakarthikeyan in Tamil Movies

வருடம் திரைப்படம்
2018 கனா
2019 நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
2021 வாழ்
2021 டாக்டர்
2022 டூன்

actor sivakarthikeyan images

Actor Sivakarthikeyan As Lyricist

வருடம் திரைப்படம் பாடல்
2018 கோலமாவு கோகிலா “கல்யாண வயசு”
2019 கூர்க்கா ” ஹே போய “
2019 நம்ம வீட்டு பிள்ளை ” காந்த கண்ணழகி “
2019 ஆதித்ய வர்மா “இது என்ன மாயமோ”
2021 டாக்டர் “செல்லம்மா”

“சோ பேபி”

2021 நாய் சேகர் “எடக்கு முடக்கு”

actor sivakarthikeyan images

Actor Sivakarthikeyan Awards and Recognition

  • 2011ஆம் ஆண்டு ஜோடி சீசன் 5-க்கு சிறந்த தொகுப்பாளருக்கான விருது .
  • 2013 ஆம் ஆண்டு சிறந்த வளர்ந்துவரும் நடிகருக்கான எடிசன் விருது.
  • 2015ஆம் ஆண்டு பொழுதுபோக்கு கலைஞருக்கான எடிசன் விருது.
  • 2021ஆம் ஆண்டு நடிகருக்கான கலைமாமணி விருது.

Actor Sivakarthikeyan Social Media Link

Reference: Wikipedia