actor vijay sethupathi images

நடிகர் விஜய் சேதுபதியின் வாழ்க்கை வரலாறு

Name Vijay Sethupathi
Born Name Vijaya Gurunatha Sethupathi
Age 43 (16 January, 1978)
Occupation Actor, Producer, Playback Singer, Lyricist
Parents Name Kalimuthu (Father)

Saraswathi (Mother)

Spouse Name Jessie Sethupathi
Children Shreeja Sethupathi (Daughter)

Surya Sethupathi (Son)

விஜய் சேதுபதி தமிழ் திரைப்பட நடிகர். இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் வாழ்க்கையை கணக்காளராக தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்பு பணியை தேர்ந்தெடுத்தார். இவர்  திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.

 

actor vijay sethupathi images

விஜய் சேதுபதிக்கு 2019 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக வழங்கப்பட்டது. அவரது நடிப்பு மிகுந்த யதார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும்.

Actor Vijay Sethupathi Early Life in Tamil

ராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும் சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் 2003ல் இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்.

actor vijay sethupathi images

நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார். இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.

இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ் திரைப்பட விழாவில் பெற்றார்.

actor vijay sethupathi images

Actor Vijay Sethupathi Marriage Life in Tamil

நடிகர் விஜய் சேதுபதி 2003 ஆம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு  ஒரு பெண் குழந்தை (ஸ்ரீஜா சேதுபதி) மற்றும் ஒரு ஆண் குழந்தை (சூர்யா சேதுபதி) உள்ளது.

actor vijay sethupathi images

Actor Vijay Sethupathi Entry in Cini Field in Tamil

இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழ்-கன்னட இரு மொழிப்படமான அகண்ட என்பதின் தமிழ் பதிப்பில் முன்னணி கதை மாந்தராக நடித்தார், கன்னட பதிப்பில் எதிர்மாறான கதை மாந்தராக நடித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை.

actor vijay sethupathi images

பின்பு பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல என்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இயக்குநர் சுசீந்திரனே முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தவர் என்று கூறினார். சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருவக்காற்று இயக்குநர் சீனு இராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார். பின்பு, சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரம் வழங்கினார்.

2012ல் இவர் நடித்த மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. சுந்தரபாண்டியனில் இவர் கதைநாயகனுக்கு எதிரியாக நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

actor vijay sethupathi images

தர்மதுரையில் ‘மக்க கலங்குதப்பா’ நடனம், எப்பொழுது டிவியில் ஒளிபரப்பப் பட்டாலும் பார்க்கிற ரசிகர்கள் ஏராளம். அத்தனை எதார்த்தமாக, தனது பாணியில் ஆடியிருப்பார். 2017 ஆம் ஆண்டு நடிகர் மாதவனுடன் இணைந்து விக்ரம் வேதா என்ற பரபரப்பூட்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இருவருக்கும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

2018 ஆம் ஆண்டில் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் மற்றும் ஜூங்கா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஜூங்கா என்ற திரைப்படத்தை இயக்குனர் கோகுல் என்பவர் இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் சிம்பு, அர்விந்த் சுவாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

actor vijay sethupathi images

அதை தொடர்ந்து 96, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட போன்ற திரைப்படங்களில் நடித்தார். 96 என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிசா நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேட்பையும் பெற்றது.

2018-ம் ஆண்டு இறுதியில் தனது 25-ம் படமாக சீதக்காதி திரைப்படத்தில் 75 வயது முதியவர் தோற்றத்தில் நடித்து பல சாதனைகளை புரிந்துள்ளார்.

actor vijay sethupathi images

Actor Vijay Sethupathi Film List in Tamil

ஆண்டு திரைப்படம் இயக்குனர்
2004 எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி மோ. ராஜா
2006 புதுப்பேட்டை செல்வராகவன்
2007 லீ பிரபு சாலமன்
2009 வெண்ணிலா கபடிகுழு சுசீந்திரன்
2010 நான் மகான் அல்ல சுசீந்திரன்
2010 பலே பாண்டியா சித்தார்த் சந்திரசேகர்
2010 தென்மேற்கு பருவக்காற்று சீனு இராமசாமி
2011 வர்ணம் எஸ். எம். ராஜூ
2012 சுந்தர பாண்டியன் எஸ். ஆர். பிரபாகரன்
2012 பீட்சா கார்த்திக் சுப்புராஜ்
2012 நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாலாஜி தரணீதரன்
2013 சூது கவ்வும் நலன் குமரசாமி
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கோகுல்
2014 ரம்மி கே. பாலகிருஷ்ணன்
2014 பண்ணையாரும் பத்மினியும் அருங்குமார்
2014 ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ்
2014 கதை திரைக்கதை வசனம் இயக்கம் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
2014 திருடன் போலீஸ் (திரைப்படம்) கார்த்திக் ராஜூ
2014 வன்மம் (திரைப்படம்) ஜெய் கிருஷ்ணா
2015 பெஞ்ச் டாக்கீஸ் கார்த்திக் சுப்புராஜ்
2015 புறம்போக்கு என்கிற பொதுவுடமை எஸ். பி. ஜனநாதன்
2015 ஆரஞ்சு மிட்டாய் பிஜ்ஜூ விஸ்வநாத்
2015 நானும் ரவுடிதான் விக்னேஷ் சிவன்
2016 சேதுபதி எஸ். யூ. அருண்குமார்
2016 காதலும் கடந்து போகும் நலன் குமரசாமி
2016 இறைவி கார்த்திக் சுப்புராஜ்
2016 தர்மதுரை சீனு இராமசாமி
2016 ஆண்டவன் கட்டளை எம். மணிகண்டன்
2016 றெக்க ரத்ன சிவா
2017 கவண் கே. வி. ஆனந்த்
2017 விக்ரம் வேதா புஷ்கர் காயத்ரி
2017 புரியாத புதிர் ரஞ்சித் ஜெயகொடி
2017 கதாநாயகன் தா. முருகானந்தம்
2017 கருப்பன் ஆர். பன்னீர்செல்வம்
2018 ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் ஆறுமுககுமார்
2018 டிராஃபிக் ராமசாமி விஜய் விக்ரம்
2018 ஜூங்கா கோகுல்
2018 இமைக்கா நொடிகள் ஆர். அஜய் ஞானமுத்து
2018 செக்கச்சிவந்த வானம் மணிரத்னம்
2018 96 சி. பிரேம் குமார்
2018 சீதக்காதி பாலாஜி தரணிதரன்
2019 பேட்ட கார்த்திக் சுப்புராஜ்
2019 சூப்பர் டீலக்ஸ் தியாகராஜன் குமாரராஜா
2019 மார்கோனி மத்தாய் சனில் கலதில்
2019 சாய் ரா நரசிம்ம ரெட்டி சுந்தர் ரெட்டி
2019 சங்கத்தமிழன் விஜய் சந்தர்
2020 ஓ மை கடவுளே அஷ்வத் மரிமுத்து
2020 கடைசி விவசாயி எம். மணிகண்டன்
2021 மாஸ்டர் லோகேஷ் கனகராஜ்
2022 காத்து வாக்குல ரெண்டு காதல் விக்னேஷ் சிவன்
2022 மாமனிதன் சீனு இராமசாமி
2022 விக்ரம் லோகேஷ் கனகராஜ்

actor vijay sethupathi images

Actor Vijay Sethupathi as Producer, Lyricist & Singer

ஆண்டு திரைப்படம் நிலை
2015 ஆரஞ்சு மிட்டாய் தயாரிப்பாளர், உரையாடல் எழுத்தாளர், பின்னணி பாடகர் மற்றும் பாடலாசிரியர்
2016 ஹலோ நான் பேய் பேசறேன் பின்னர் பாடகர்
2017 கட்டப்பாவ காணேம் கதைகூறுபவர்
2017 இப்படை வெல்லும் கதாசிரியர்
2018 ஜூங்கா தயாரிப்பாளர்
2018 மேற்குத் தொடர்ச்சி மலை தயாரிப்பாளர்
2019 இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பின்னனி பாடகர்
2019 அண்டாவ காணாம் கதைகூறுபவர்

actor vijay sethupathi images

Actor Vijay Sethupathi Awards and Recognition

  • 2019 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக வழங்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது 96 படத்திற்காக வழங்கப்பட்டது.

Actor Vijay Sethupathi Social Media Link

Reference: Wikipedia