Arangetra Velai cover

Movie: Arangetra Velai (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Uma Ramanan and K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ

ஆண்: மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று

பெண்: தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்.
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம் பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
ஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
ஆண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ

பெண்: மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
ஆண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
ஆண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ