Meenuku Song Lyrics in Tamil
மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்
கிச்சு கிச்சு பண்ணும் கிளிவண்ண பெண்ணே
பச்சை முத்தம் தர வரவில்லையா
இரு இரு இருதயம் நெருங்கியே பின்னே
இதழுக்கு என்ன இடைவெளியா
அடடா முத்தம் பறிக்கிறவழி இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி சிக்குமா படித்த கிளி
மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்
பெண் கடல்களில் அலைகள் இல்லை
அது போல் மெளனம் காக்கிறாய்
ஆண் கடல்களில் அலைகள் உண்டு
அது போல் உன்னை தீண்டினேன்
அலை என்னும் கரம் நீட்டி நீட்டி அடி வருடியே போகிறாய்
வெட்கம் வந்து விழி மூடும் நேரம்
முத்தம் கொள்ளையிட பார்க்கிறாய்
அன்பை தந்து அன்பை தந்து ஆளாக்கினாய் அப்போது
அள்ளிதந்து அள்ளிதந்து ஆணாக்குதல் எப்போது
அடடா முத்தம் பறிக்கிறவழி இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி சிக்குமா படித்த கிளி
மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்...
Movie: Neerparavai
Lyrics: Vairamuthu
Music: N. R. Raghunanthan
0 Comments