Thottu Thottu Song Lyrics in Tamil
ஆஆஆஆஆ…….
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே
போகும் பாதை தான் தெரிகிறதே மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி தொலைந்திடும் பொழுது
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ
இந்த கனவு நிலைக்குமா தினம் காண கிடைக்குமா
உன் உறவு வந்ததால் புது உலகம் கிடைக்குமா
தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே
வேலி போட்ட இதயம் மேலே வெள்ளைnகொடியை பார்த்தேனே
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே பாத சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே
ம்ம் தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ
ஆஆஆஆஆ…….
விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே கண்கள் சிவந்து தலை சுத்தியதே
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே இது ஒரு சுகம் என்று புரிகிறதே
நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் என்னை கேட்கிறதே
பூட்டி வைத்த உறவுகள் மேலே புதிய சிறகு முளைக்கிறதே
இது என்ன உலகம் என்று தெரியவில்லை
விதிகள் வரை முறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கி போகையில்
இன்பம் துன்பம் எதுவும் இல்லை
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே அவள்
பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே
போகும் பாதை தான் தெரிகிறதே மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி தொலைந்திடும் பொழுது...
Movie: Kaadhal Kondein
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja
0 Comments