Lyricist Na. Muthukumar

இவன் தான் பாடல் வரிகள்

இவன் தான் என் கனவோடு வருபவனோ
என் மனதோடு வாழ்பவனோ
என் உயிரோடு கலந்தவனோ
என் வயதோடு கரைந்தவனோ

இவன் தான் என் இதழோடு சிரிப்பவனோ
என் இரவோடு விழிப்பவனோ
என் இமையாக துடிப்பவனோ
என் சுமையாக இருப்பவனோ

என் கூந்தல் காட்டில் தொலைந்திடுவானோ 
என்னை கூறு போட வருபவனோ 
இந்த சிறுக்கி மனசை பிடித்திடுவானோ
என் ஆசை பொறுக்கி ஆயுள் வரை இவன் இவன் தான்

இவன்… தான் என் பாவாடை பூக்களிலே
ஒரு தேன் தேட பிறந்தவனோ
என் தேய்கின்ற நினைவுகளை
தேன் நிலவாக்க பிறந்தவனோ

லலலலல்லா தரராரா தர ர ர ரா ரா
ர ர ர ரா ராரா இந்த சிறுக்கி
மனசை பிடித்தவனோ
தரராரா தர ர ர ரா ரா ர ர ர
ரா ராரா தர ர ர ர ரா…

Movie: Kaadhal
Lyrics:Na. Muthu Kumar
Music: Joshua Sridhar

Leave a Reply