மாமன்னன் திரைப்படத்திற்கு நடிகர் தனுஷ் பாராட்டு

, ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்

சென்னை,

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் ‘மாமன்னன்’ படத்துக்கு தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மாரி செல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிபூர்வமானது. வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர். இடைவேளை காட்சிக்கு தியேட்டர் அதிர போகின்றது . இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் அழகாக உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.