புத்தம் புது காலை பாடல் வரிகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை ..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை பொன்னிற வேளை..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ..
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ..
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை பொன்னிற வேளை..
வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ..
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ..
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவைகூடுது..
புத்தம் புது காலை பொன்னிற வேளை..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…
Movie: Alaigal Oivathillai
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja