Nilavae Vaa Female Song Lyrics

Movie: Gokulathil Seethai (1996)
Music: Deva
Lyricists: Agathiyan
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: அன்பே தெய்வமே கண்டேன் பூமி மேலே ஒளி ஏற்றுவோம் பிறர் வாழ்வில் நாமே நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா…

குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண்: நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா… நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா…

பெண்: மலரே உன் வாசம் அழகே மழையே உன் சாரல் அழகே நதியே உன் வேகம் அழகே. கடலே உன் நீலம் அழகே

பெண்: பனியே உன் காலம் அழகே பகலே உன் காலை அழகே இரவே உன் மாலை அழகே.. உலகே என் தேசம் அழகே

பெண்: கவிதை அழகை கலைகள் அழகை மழலை அழகை மறந்தாயே மனிதா மனிதா வாழ்க்கை முழுதும் அழகே அழகே காண்பாயே வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே இது உண்மையே..ஏ..ஏ..ஏ..ஏ…

பெண்: நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா… நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா…

குழு: ஹோயெஹ்…ஹோயெஹ்…

குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண்: முகமே உன் கண்கள் அழகே விழியே உன் பார்வை அழகே இதழே உன் பேச்சு அழகே மொழியே உன் வார்த்தை அழகே

பெண்: மனமே உன் எண்ணம் அழகே நினைவே உன் நேர்மை அழகே உயிரே உன் மூச்சு அழகே மனிதா உன் தேகம் அழகே

பெண்: சிரிப்பும் அழகே அழுகை அழகே மனித வாழ்க்கை இது தானே கண்ணீர் விட்டு பாலை அருந்தும் அன்னபறவை நீதானே வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே மதி வெல்லுமே…ஏ..ஏ..ஏ..ஏ…

பெண் மற்றும்
குழு: நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா… நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா…

குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ