Indraikku Yen Indha Song Lyrics

Movie: Vaidehi Kathirunthal (1984)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: P. Jayachandran and Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஆ.ஹா.ஆஆ.. ஹா.ஆஆ..ஆஆ… இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின்.. சுயம்வரமோ கண்திறந்தால்.. சுகம் வருமோ

பெண்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே

ஆண்: பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே

பெண்: பூவினைத் தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே

ஆண்: நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும் நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்

பெண்: மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
ஆண்: மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
பெண்: சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்

பெண்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின்.. சுயம்வரமோ கண்திறந்தால்.. சுகம் வருமோ

ஆண்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ..

பெண்: ……………

பெண்: மாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ

ஆண்: ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ

பெண்: காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ

ஆண்: மஞ்சத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம்
பெண்: மிதந்து மறந்து மகிழ்ந்த நெஞ்சத்தில்

ஆண்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
பெண்: கனவுகளின்.. சுயம்வரமோ கண்திறந்தால்.. சுகம் வருமோ

ஆண்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே.