actor rajinikanth images

நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு

Name Rajinikanth
Born Name Shivaji Rao Gaekwad
Born 71 (December 12, 1950)
Occupation Actor, Film Producer
Parents Name Ramoji Rao Gaekwad (Father)

Jijabai (Mother)

Spouse Name Latha Rajinikanth
Children Aishwarya (Daughter)

Soundarya (Daughter)

தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவரகள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகன். ஒரு கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு திரைப்படத்துறையில் மாபெரும் கதாநாயகனாக சாதனைப் படைத்த ரஜினிகாந்த்.

actor rajinikanth images

Actor Rajinikanth Childhood Days in Tamil

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு பெங்களூர், மைசூரில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் மற்றும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தந்தை காவலராகப் பணிபுரிந்தவர். தாய் குடும்பத் தலைவியாக இருந்தார்.

இவரின் இயற்பெயர் சிவாஜி இராவ் கைக்வாடு ஆகும். மராட்டியப் பேரரசர் சிவாஜி பேரரசரின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. வீட்டில் மராத்திய மொழியும் வெளியில் கன்னடமும் பேசி வளர்ந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

actor rajinikanth images

Actor Rajinikanth Early Life in Tamil

1956 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பணிநிறைவிற்குப் பின் இவரது குடும்பம் பெங்களூர் சென்று அனுமானந்தா நகரில் வீடு கட்டி குடியேறினர். ஒண்பது வயதாக இருக்கும் போது தனது தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரஜினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது. ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பனின் உதவியால் “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார்.

actor rajinikanth images

Actor Rajinikanth Marriage Life in Tamil

ரஜினிகாந்ந், ஆந்திர மாவட்டம் திருப்பதில், பிப்ரவரி 26, 1981 அன்று லதா பார்த்தசாரதியை தன்னுடய 31 ம் வயதில்  திருமணம் செய்தார். அவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். லதா தற்போது ஆசிரமம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார்.

actor rajinikanth images

Actor Rajinikanth Entry in Cini Field in Tamil

ரஜினியின் நடிப்பின் ஆர்வத்தை கண்டு ஆச்சிரியமான இவரின் தோழர் ராஜ் பகதூர், இவரை நடிப்பினை பற்றி பல விஷயங்களை கற்றுக்கொள்ள துண்டியுள்ளார். அதற்காக “மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்” என்னும் நிறுவனத்தில் சேர்ந்து படிக்க நினைக்கும் இவருக்கு இவரது குடும்பம் துணையாக இருக்கவில்லை. இவரின் நண்பர் “ராஜ் பகதூர்” இவருக்கு பணம் அளித்து பல உதவிகளை செய்து வந்துள்ளார்.

actor rajinikanth images

அந்த நிறுவனத்தில் இவரின் நடிப்பினை கண்ட கே. பாலச்சந்தர் இவரை தமிழ் மொழியை கற்க வேண்டும் என அறிவித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

அதனை தொடர்ந்து கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் காட்டியது, மேலும் ‘அவர்கள்’ (1977), ‘16 வயதினிலே’ (1977), ‘காயத்ரி’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.

actor rajinikanth images

தனது திரைப்பட தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், பின்னர் துணை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார். ஹீரோவாக இவர் நடித்த முள்ளும் மலரும், பில்லா, முரட்டு காளை, ஜானி, தில்லுமுல்லு, மூன்று முகம் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்று தந்துள்ளது.

1990 ஆம் ஆண்டுகளில் நடித்த ‘பணக்காரன்’, ‘அதிசயப்பிறவி’, ‘தர்மதுரை’, ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், இவருக்கு இந்தியாவில் ‘சூப்பர்ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத்தந்தது எனலாம்.

actor rajinikanth images

1995 ஆம் ஆண்டு வெளிவந்த “முத்து” திரைப்படம், இந்தியாவை தாண்டி வெளிநாட்டிலும் முத்திரை பதித்தது. குறிப்பாக ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட இத்திரைப்படம் ஜப்பானிலும் பெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் அம்மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற தகுதியையும் பெற்றது.

2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் மற்றும் 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது. மீண்டும் ஷங்கருடன் இணைந்து, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட “எந்திரன்’ திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, பல சாதனைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா வரலாற்றில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது.

actor rajinikanth images

Actor Rajinikanth Important Film List in Tamil

ஆண்டு திரைப்படங்கள்
1975 அபூர்வ ராகங்கள்
1977 புவனா ஒரு கேள்விக்குறி
1997 அவர்கள்
1977 16 வயதினிலே
1978 முள்ளும் மலரும்
1979 ஆறிலிருந்து அறுபது வரை
1981 பில்லா
1981 போக்கிரிராஜா
1981 முரட்டுக்காளை
1982 எங்கேயோ கேட்ட குரல்
1982 மூன்று முகம்
1984 நல்லவனுக்கு நல்லவன்
1985 ஸ்ரீ ராகவேந்திரா
1985 நான் சிவப்பு மனிதன்
1985 படிக்காதவன்
1986 மிஸ்டர் பாரத்
1987 வேலைக்காரன்
1987 மனிதன்
1988 தர்மத்தின் தலைவன்
1988 குரு சிஷ்யன்
1990 பணக்காரன்
1991 தளபதி
1992 அண்ணாமலை
1992 மன்னன்
1993 வள்ளி
1993 எஜமான்
1993 உழைப்பாளி
1994 வீரா
1994 பாட்ஷா
1995 முத்து
1997 அருணாச்சலம்
1999 படையப்பா
2002 பாபா
2005 சந்திரமுகி
2007 சிவாஜி
2010 எந்திரன்
2016 கபாலி
2018 காலா
2018 2.0
2019 பேட்ட

actor rajinikanth images

Actor Rajinikanth Politics in Tamil

1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது ஆளுங்கட்சியாக இருந்த அ.இ.ஆ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் கருத்து கூறியதால் அக்கட்சி தோற்றதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதன் பிறகு, ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக பல கேள்விகள் எழுந்தன.

1996 தேர்தலில் இரசினிகாந்தின் தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள இவரது பல ரசிகர்கள் அரசியலில் நுழைவதற்கு, குறிப்பாக மாநில முதல்வர் பதவிக்குப் போட்டியிட அழைப்பு விடுத்தனர். ரஜினிகாந்த் டிசம்பர் 31, 2017 அன்று தன் அரசியல் வருகையை அறிவித்தார். தான் ஆரம்பிக்கப்போகும் அரசியல் கட்சி 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார்.

actor rajinikanth images

Actor Rajinikanth Awards and Recognition

  • இந்திய நடுவண் அரசு 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.
  • இந்திய நடுவண் அரசு 2016 ஆம் ஆண்டு பத்ம விபூசன் விருது வழங்கி சிறப்பித்தது.
  • இந்திய நடுவண் அரசு 2019 ஆம் ஆண்டு தாதாசாகெப் பால்கே விருது வழங்கி சிறப்பித்தது.
  • 1984 ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது.
  • 1989 ஆம் ஆண்டு தமிழக அரசு எம்.சி. ஆர் விருது வழங்கியது.
  • தமிழக அரசு திரைப்பட விருதுகள் – முள்ளும் மலரும், மூன்று முகம், நல்லவனுக்கு நல்லவன், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி போன்ற திரைப்படத்திற்க்காக வழங்கப்பட்டது.
  • பிலிம்பேர் விருதுகள் – தளபதி, அண்ணாமலை, வள்ளி, பாட்ஷா, முத்து போன்ற திரைப்படத்திற்க்காக வழங்கப்பட்டது.

Actor Rajinikanth Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia