actor vijayakanth images

நடிகர் விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறு

Name Vijayakanth
Born Name Vijayaraj Azhagarswami
Age 69 (August 25, 1952)
Occupation Film Actor, Politician, Director, Producer, Philanthropist
Parents Name K. N. Alagarswami (Father)

Andal (Mother)

Spouse Name Premalatha
Children Shanmuga Pandian (Son)

Vijay Prabhakar Alagarswami (Son)

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவன தலைவரும், பொதுச்செயலாளரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழக சட்டசபை அரசியல்வாதியும் ஆவார். விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு‘ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர்.

actor vijayakanth images

விஜயகாந்த் இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள குறிப்பிடப்படும் பிரபலங்களில் இவரும் ஒருவராவார். இவருக்கு தமிழ் சினிமாவில் “புரட்சி கலைஞர்‘ என்னும் பட்டம் உண்டு.

Actor Vijayakanth Childhood Days in Tamil

நடிகர் விஜயகாந்த் என்னும் விசயராஜ், கே. என் அழகர்சாமி மற்றும் ஆண்டால் தம்பதிக்கு மகனாக ஆகஸ்ட் 25, 1952 ஆம் ஆண்டு  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார்.

actor vijayakanth images

Actor Vijayakanth Early Life in Tamil

சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விசயகாந்து தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார்.

சினிமாவில் நடிகன் ஆக வேண்டும் என்ற மோகத்தில் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை கடந்து 1979 ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு‘ என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

actor vijayakanth images

Actor Vijayakanth Marriage Life in Tamil

1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ல் நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சன்முகப் பாண்டியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர். இவர்களது இளைய மகன் ‘சகாப்தம்‘ திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

actor vijayakanth images

 

Actor Vijayakanth Entry in Cini Field in Tamil

நடிகர் விஜயகாந்த் பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார். இவர் 1979ல் அகல் விளக்கு என்ற படத்தில் நடித்துள்ளார், பின்னர் அதே ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் நடித்துள்ளார்.

விஜயராஜ் என்ற தனது பெயரில் ராஜ் என்னும் வார்த்தையை தூக்கி காந்த் என்னும் வார்த்தையுடன் இணைத்து ‘விஜயகாந்த்‘ என தனது பெயரினை மாற்றி அமைத்துள்ளார்.

`சட்டம் ஒரு இருட்டறை’, `தூரத்து இடிமுழக்கம்’, `அம்மன்கோவில் கிழக்காலே’, `உழவன் மகன்’, `சிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

actor vijayakanth images

Actor Vijayakanth Flim List in Tamil

ஆண்டு திரைப்படம்
1979 அகல் விளக்கு
1979 இனிக்கும் இளமை
1981 சட்டம் ஒரு இருட்டறை
1982 சிவந்த கண்கள்
1982 பட்டணத்து ராஜாக்கள்
1984 நூறாவது நாள்
1984 வைதேகி காத்திருந்தாள்
1984 நல்ல நாள்
1985 புதிய சகாப்தம்
1985 புதிய தீர்ப்பு
1985 நீதியின் மறுபக்கம்
1985 நானே ராஜா நானே மந்திரி
1985 ராமன் ஶ்ரீராமன்
1986 அம்மன் கோயில் கிழக்காலே
1986 ஊமை விழிகள்
1986 கரிமேடு கருவாயன்
1987 சட்டம் ஒரு விளையாட்டு
1987 நினைவே ஒரு சங்கீதம்
1987 வீரன் வேலுத்தம்பி
1988 உழைத்து வாழ வேண்டும்
1988 செந்தூரப்பூவே
1988 தெற்கத்திக்கள்ளன்
1988 தென்பாண்டிச்சீமையிலே
1989 என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
1989 பொன்மன செல்வன்
1990 புலன் விசாரணை
1990 சத்ரியன்
1991 மாநகர காவல்
1991 கேப்டன் பிரபாகரன்
1992 பரதன்
1992 சின்ன கவுண்டர்
1993 செந்தூரப் பாண்டி
1994 ஆனஸ்ட் ராஜ்
1994 சேதுபதி ஐ.பி.எஸ்
1994 பெரிய மருது
1995 திருமூர்த்தி
1995 கருப்பு நிலா
1996 அலெக்சாண்டர்
1998 உளவுத்துறை
1999 கண்ணுபடப்போகுதய்யா
1999 பெரியண்ணா
2000 வல்லரசு
2000 வானத்தைப் போல
2001 நரசிம்மா
2001 வாஞ்சிநாதன்
2001 தவசி
2002 தென்னவன்
2002 சொக்கத்தங்கம்
2002 ரமணா
2004 எங்கள் அண்ணா
2006 பேரரசு

actor vijayakanth images

Actor Vijayakanth Social Activities in Tamil

1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார்.

மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். 2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார்.

actor vijayakanth images

Actor Vijayakanth Political Entry in Tamil

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தனது தேசப்பற்று வசனங்கள் மூலம் பிரபலமான இவர், அரசியலிலும் தனது பங்களிப்பினை கொடுத்துள்ளார். “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற பெயரில் தனக்கென ஒரு கட்சியினை தொடங்கி புகழ் பெற்றுள்ளார். இவர் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

2006 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006 10 மே 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், இவரது கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.

2011 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு இவரது கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயகாந்த், 2016 தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது மட்டுமில்லாமல், டிபாஸிட்டையும் பறிகொடுத்தார்.

actor vijayakanth images

Actor Vijayakanth Awards and Recognition

1987 ஆம் ஆண்டு “அம்மன் கோயில் கிழக்காலே” திரைப்படத்திற்க்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

Actor Vijayakanth Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia