Yengirindhu Vandhayo Song Lyrics in Tamil
எங்கிருந்து வந்தாயோ எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே.. கத பேசி போனாயே..
அதை நானும் அறியும் முன்னே அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
வாசத்தண்ணி தெளிக்கையில வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையிலே என்ன நீயும் புளியிறியே
ஆஞ்சி வச்ச கீர போல நினைப்புல தான் கரையிரியே
அம்மி வச்ச தேங்கா சில்லா அடி மனச நசுக்குறியே
அட நீயும் மறைந்தாயே மெல்லக் காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ எதுக்காக வந்தாயோ
நடக்கையில தொடர்ந்து வர.. நடு நடுவே மறஞ்சுடுர
தலைமுடிய ஒதுக்கையில வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுர
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன ஒதர ஒரு வழி இல்லையே
அட நீயும் மறைந்தாயே மெல்லக் காற்றில் கரைந்தாயே
ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்… உயிரோடு உறைந்தாயே…
Movie: Kayal
Lyrics: Yugabharathi
Music: D. Imman
0 Comments