Ennai Thalatta Varuvala Song Lyrics in Tamil- என்னை தாலாட்ட வருவாளோ

Ennai Thalatta Varuvala Song Lyrics in Tamil

Lyricist Palani Bharathi

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்ட இதழ் முத்தம் ஒன்று தருவாளா 
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ 
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ

பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள் 
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயாில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராத நான் தூங்க மடி ஒன்று தாராத 
தாகங்கள் தாபங்கள் தீராத  
தாளங்கள் ராகங்கள் சேராத வழியோரம் விழி வைக்கிறேன்

எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பாா்வையில் 
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் 
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ 
பாதைக்கு நீரூற்றி போவாளோ 
வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ ……. வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ ……. தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ ……. வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ ……. தருவாளோ...

Movie: Kadhalukku Mariyaatha
Lyrics: Palani Bharathi
Music: Ilaiyaraaja

Post a Comment

0 Comments